பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிகளில் அறிவியல் 초 மனித வாழ்க்கை பன்மடங்கு உயர்ந்திருக்கின்றது என்பதற்கு ஐயமில்லை. கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக இத்துறைகளில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக் கேற்றவாறு மக்கள் சிந்தனே வளரவில்லை; அவர்கள் எண்ணும் முறைகளும் அமையவில்லே மனப்பான்மையும் ஏற்படவில்லை. தவருன கருத்து : கடந்த இரண்டு உலகப் பெரும்போர்களால் மக்கள் சமூகமும் வாழ்க்கையைப்பற்றிய நம்பிக்கையை இழந்து வருகின்றது. ஜப்பானியத் தீவுகளில் அணுகுண்டுகளால் ஏற்பட்ட சேதங்கள் இன்னும் மக்கள் மனத்தைவிட்டு அகலவில்லை; அவற்றை நினைக்கும்பொழுதே குலே நடுங்குகின்றது ; உள்ளம் வேகின்றது. அறிவியல், உலக அழிவுக்குமட்டிலுந்தான் பயன்படுமா என்ற ஐயமும் ஏற்படுகின்றது. ஆனால், அறிவியல் ஆக்கத் துறைகளில் பயன் படுவதைக் கண்ணுறும்பொழுது இல் ஐயம் சிறிது நீங்குகின்றது. வாழ்க்கையை வளமிக்கதாகச் செய்யவும் அறிவியல் பன்முறையில் பயன்படும் என்ற நம்பிக்கையும் ஏற்படாமல் இல்லை : வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளையும் அறிவியல் துணைக்கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என்ற உறுதியும் உண்டாகின்றது. என்ருலும், அறிவியலின் அழிக்கும் ஆற்றலும் ஆக்கவலியும் அறிவியலேப்பற்றி, மக்கள் மனத்தில் ஒருவிதக் குழப்பத்தை உண்டாக்கத்தான் செப் கின்றன. இத்தகைய குழப்பத்தை, தவருகத் தோன்றும் கருத்தை, யாங்ங்னம் போக்குவது? நல்லதொரு பாடத்திட்டம் வகுத்து சிறந்த முறையில் அறிவியற் பாடங்களேக் கற்பித்தால் இக் குழப்பம் ஒரளவு அகலும். கற்பிக்கப்பெறும் செய்திகளேவிட கற்பிக்கும் முறைதான், முக்கியம். க ற் பி க் கும் முறைகளினால்தான் மாளுக்கர்களிடம் அறிவியலைப்பற்றி நல்ல மனப்பான்மையை உண்டாக்கி வளர்க்க முடியும். சிறுவர்கள் அறிவியல் கற்கும் முறை : சிறுவர்கள் கற்கும் முறைகளைக் கவனித்து அறிவது அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்கட்குப் பயிற்றும் முறைகளில் சிறந்த வழிகளே அமைக்கும். சிறுவர்கள். ஏனையவற்றைக் கற்றுக்கொள்வது போலவே அறிவியலேயும் பல்வேறு வழிகளில் கற்கின்றனர். பல கல்வி அறிஞர்கள் சிறுவர்களே நன்கு கவனித்து அவர்கள் கற்கும் முறைகளைப் பற்றிய குறிப்புக்கள் தந்துள்ளனர் : (i) சோதனை செய்தல், (ii) எளிய கவர்ச்சிகரமான அறிவியல் நூல்களைப் படித்தல், (iii) உற்றுநோக்கல், (ii) சிறு தொலைப் பயணங்களை மேற்கொள்ளல், (w) காட்சித் துணேப்பொருள்களைப் பயன்படுத்துதல் ஆகியவை சிறுவர்கள் கற்கும் முறைகளாகக் கருதலாம் என்பது அவர்கள் கண்ட அதுபவம்.” 1. జౌమG37 அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல். பக் (12-15)