பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலும் பிற பாடங்களும் - $73 நல்கும். மேல் வகுப்பு மாளுக்கர்களுக்கு இலக்கியங்களில் வரும் இயற்கை வருணனைப் பாடல்களைச் சுட்டிக் காட்டலாம். கவிமணியின், பொன்னுெளியும் மரகதத்தின் பொலிவும் செங்கெல் புலங்காட்ட, அதன்மீது கிழலே வீசும் பன்னரிய சரற்கால மேகங் தன்னைப் பரிதிவிரைந் தெழுந்தோடி வெருட்டிச் செல்லத் தன்னைமறந் தொளிமயக்கில் மயங்கி வண்டு சாருமலர்த் தேன்மறந்து சுழன்று பாட, மன்னுகுளம் கதிக்கரையில் வாழுந் தாரா மனங்களித்துக் குரலெழுப்பித் திரியும் மாதோ." என்ற சரத் காலத்தை வருணிக்கும் பாடலும், பாரதிதாசனின், காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்; கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச் சோலேயிலே மலர்களிலே தளிர்கள் தம்மில் தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள் : மாலையிலே மேற்றிசையில் இளகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் : ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டங் தனில்அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்.' என்ற அழகினை உணர்த்தும் பாடலும் அவர்கட்கு இன்பம் பயக்கக் கூடும். பெளதிக இயலின் மெய்ம்மையைப் பாரதி, இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென இயல்நூலார் இசைத்தல் கேட்டோம் : இடையின்றிக் கதிர்களெல்லாம் சுழலுமென வானூலார் இயம்பு கின்ருர், இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப் பொருட்கெல்லாம் இயற்கை யாயின் - இடையின்றிக் கலைமகளே கிணதருளில் எனதுள்ளம் இயங்கொ னதோ? : என்று கவிதையில் பயன்படுத்தியிருப்பதை எடுத்துக்காட்டலாம். உயர்நிலப் பள்ளி வகுப்புகளில் வானியல் பகுதிகள் பாடமாக வந்துள்ளன. கதிரவன் குடும்பத்திலுள்ள கோள்கள், விண்மீன்கள் பற்றிய செய்திகள் அவர்கள் பாடப் பகுதியில் வருகின்றன. பல்லாயிரங் கோடி ஆண்டுகட்கு முன்னர் எங்கும் பாழாக நின்ற வான வெளியில் தோன்றிய கனல் மயமான ஒரு வாயு மேகத்திலிருந்துதான் 1. கவிமணி.-சரத் காலம். 2. பாரதிதாசன் : அழகின் சிரிப்பு 9. பாரதி : பாஞ்சாலி சபதம்-206 (கலைமகள் வணக்கம்)