பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலும் பிற பாடங்களும் * 475 . ..............--്--05:23, 10 பெப்ரவரி 2016 (UTC) கலந்து ஆய்ந்து தத்தம் பாடங்களில் முறையே வரும் அறிவியல்பற்றிய தகவல்கள், கணிதம்பற்றிய பகுதிகள் எவை எவை என்பதையறிந்து இரண்டையும் கூடியவரை இணைந்து போகுமாறு செய்தால் மாளுக்கர் கள் நல்ல விளக்கத்தைக் காண்பர் : அவர்கள் தெளிவான அறிவினையும் அடைவர். அறிவியல் பாடப்பகுதிகள் சிலவற்றில் புள்ளி இயல் அறிவும் வேண்டியிருக்கும். உயர்நிலையில்தான் இவை தேவைப்படும் : தேவைப்படும்பொழுது அறிவியல் ஆசிரியர் அவற்றைக் கற்பிக்க வேண்டும். கணித ஆசிரியரைக்கொண்டும் கற்பிக்கச் செய்யலாம். தேவைப்படுகின்ற சமயம்நோக்கிக் கற்பித்தால் மாளுக்கர் எதையும் எளிதில் புரிந்துகொள்வர். கணித இயல் அறிவு சரியாக ஏற்படா விட்டால் அறிவியல்பற்றிய கணக்குகளைப் புரிந்துகொண்டு சரியாகச்' செய்ய இயலாது. நிலவியல்: ஏனேய துறைகளேவிட இத்துறையை அறிவியலுடன் எளிதில் இணைக்கலாம். எடுத்துக்காட்டாக வானியலே கிலவியல் போன்றும் கற்பிக்கலாம் : அறிவியல் போன்றும் கற்பிக்கலாம். காற்றின் அமுக்கம், வெப்ப நிலை, காற்றுவீசும் திசை, மழை பெய்தல் முதலியவற்றை அறிதலும் அளக்கும் கருவிகளைப்பற்றி அறிதலும் அறிவியல் துறையைச் சேர்ந்தவை. ஆல்ை, அவற்றைக் கொண்டு பருவங்கிலபற்றிக் கூறும் தகவல்களும், அவற்ருல் நிலமும் நிலத்தில் வாழ் உயிர்களும் எவ்வாறு பாதிக்கப்பெறுகின்றன என்பதும் நிலவியலைச் சேர்ந்தவை. நிலத்தின் தன்மை, தாவரங்கள், பிராணிகள் ஆகியவற்றைப்பற்றி ஆராயும்பொழுது நிலவியலும் அறிவியலும் இணைந்து செல்லும். நிலவியலே இயற்கைப் பாடத்தின் ஒரு பகுதி என்று கூடக் கூறலாம். பெளதிகப் பிரிவைக் கூறும் பாறைகள், இயற்கைத் தேய்வை உண்டாக்கும் முறைகள், கிலத்தன்மை, காலநிலை, வானிலை, கதிரவன், சந்திரன், கிரஹணம், விண்மீன்கள், காற்றின் வெப்பஅமுக்க நிலைகள், காற்றின் ஈரப்பத்ம், ஆறுகள், அவற்றின் செயல்கள் முதலியவைபற்றிய செய்திகளே அறிவிக்கும் பகுதிகள் பாவும் அறிவியல் அறிவைக் கொண்டவை ; நில உட் கூற்றியல், பெளதிக இயல், வானியல் போன்ற துறைகளின் அறிவைக் கொண்டுதான் இவற்றை நன்கு உணரமுடியும். அறிவியல் ஆசிரியர் வெப்பங்கிலமானி, பாரமானி, ஈரமானி, மழைமானி முதலிய கருவிகளைக் கையாளும் முறையை நிலவியலாசிரியருக்குத் தெரிவிக்கலாம். கில உட்கூறிய லாசிரியர் பூமியில் கிடைக்கும் கக்கான் கல், மணல், களிமண் போன்ற பொருள்களைப்பற்றியும், தாதுப் பொருள்களின் தன்மைகளையும் நிலவியலாசிரியருக்கு விளக்கலாம். அங்ங்னமே நிலவியலாசிரியரிட மிருந்து சில தகவல்களே அறிவியல் ஆசிரியர் அறியலாம். அன்றியும், உயிரியலாசிரியரிடமிருந்து நிலவியலாசிரியர் தாவரங்களையும் பிராணி