பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அறிவியல் ஆசான் ஆசானின் இலக்கணம் : ஆசிரியர்களைப்பற்றிப் பொதுவாக ஆன்ருேர் குறிப்பிட்டவை அனேத்தும் அறிவியல் ஆசிரியருக்கும் பொருந்தும். உயர்கிலேப் பள்ளி வாழ்க்கையில் ஆசிரியர்தான் மிகவும் செல்வாக்குள்ள கூறு என்று கருதுதல் வேண்டும். நல்லாசிரியரின் இயல்பை நன்னூல், குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை கிலம்மலை நிறைகோல் மலர்கிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும் அமைபவன் நூலுரை யாசிரி யன்னே, ! என்று குறிப்பிடுகின்றது. கல்லாசிரியரை நிலம், மலே, துலாக்கோல், மலர் ஆகியவற்றுடன் ஒப்பிட்ட காரணத்தையும் விளக்குகின்ருர் ஆசிரியர். கற்பிக்கும் முறைகளைக் கூறும் மேட்ைடு நூல்களும் நல்லாசிரியரின் தன்மைகளே விரித்துரைக்கின்றன. இக் கருத்துகள் யாவற்றையும் அறிவியல் ஆசிரியர் சிந்தித்து உணர வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இனி, அறிவியல் ஆசிரியரின் பணி சிறப்பதற்கு அவரது கல்வியறிவு, பயிற்சி யறிவு, மொழியறிவு, அவரிடம் அமையவேண்டிய திறன்கள், அவர் ஆயத்தம் செய்து கொள்ள வேண்டிய முறைகள் முதலியவைபற்றிய இன்றியமையாத ஒரு சில குறிப்புகளே ஈண்டுத் தருவோம். ஒரு பள்ளியிலுள்ள அறிவியல் பாடத்திட்டம் நல்ல முறையில் செயற்படுவது அறிவியல் ஆசிரியரைப் பொறுத்தது. சிறந்ததோர் ஆய்வகம், உயர்ந்ததொரு பாடத்திட்டம், நல்ல பாடவேளைப் பட்டி முதலிய யாவும் நன்முறையில் அமையினும், ஆசிரியர் நல்ல அறிவியல் படிப்பு, நல்ல பயிற்சி, நல்ல தாய்மொழி யறிவு ஆகியவை பெற்று, தன் வேலையில் உற்சாகம் மிக்கவராக இராவிட்டால் கற்பித்தல் எங்ங்ணம் வெற்றியுடன் நடைபெற இயலும் ? எனவே,

நன்னூல்-நூற்பா-26. 2, டிை நூற்பாட27, 28, 29, 80.

3. Bossing : Progressive Methods of Teaching in Secondary Schools. Chap. 2.