பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இந்நூலாசிரியர். முசிறி கழக உயர் நிலைப்பள்ளி, திருச்சி புண் சூசைப்பர் கல்லூரி, சைதாப்பேட்டை ஆ கல்லூரி ஆகியவற்றில் பயின்றவர். துறையில் பெரு நாட்டங்கொண்டு இவரைத் தமிழன்னை ஆட்கொண்டாள். துறை உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராகப் ஆண்டுகள் பணிபுரிந்தார். காரைக்குடி அழகட் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரிம் ராகப் பணிபுரிந்த பத்து ஆண்டுகளில் ஆசிரியம் உளவியல், அறிவியல், இலக்கியத்திறனாய்வு:. இலக்கிய ஆராய்ச்சி, இலக்கண ஆராய்ச்சி சி துறைகளில் பல நூல்களை இயற்றினார். பதினொரு ஆண்டுகளாகத் திருப்பதி திருவே கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை தலைவராகப் பணிபுரிந்து வரும் இவர், நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆராய்ந்து, 'டாக்டர்' பட்டம் பெற்றவர். கடந்த பதினொரு ஆண்டுகளிலும் பல துறை நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றுள் இவருடைய 'இல்லறயெறி' குறிப்பிடத்தக்க ஒன்று. இனிமை, எளிமை, தெளிவு - இவை இவருடைய நூல்களின் தனிச்சிறப்புக்களாகும்.


ASIAN PRINTERS, MADRAS-i4.