பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 - அறிவியல் பயிற்றும் முறை


۔

SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS 7. ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறைகளில் கழிக்க வழி காட்டுதல் : பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாளுக்கர்கள் கல்வி பெறும்பொழுதும், கல்வி முற்றுப்பெற்று வாழ்க்கையில் அவர்கள் ஈடுபடும்பொழுதும் ஒய்வு நேரத்தைப் பயனுள்ள வழிகளில் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது கல்வியின் நோக்கமாக இருத்தல் வேண்டும் என்பதைக் கல்வித்துறை அறிஞர்கள் அடிக்கடி உணர்த்துகின்றனர். இதற்கு அறிவியல், ஆசிரியர்களுக்குப் பெருந்துணையாக உள்ளது. வேலே நேரத்தைத் தவிர ஒய்வு நேரத்தில் மக்களால் மேற்கொள்ளப்பெறும் துறைகள் யாவும் கிட்டத்தட்ட அறிவியல் அறிவின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன. ஒளிப் படக்கலே, தேனீ வளர்த்தல், காகிதம் செய்தல், சோப்பு செய்தல், தோட்டம் போடுதல், பாய்முடைதல் போன்ற ஈடுபரட்டுக் கலேகளை ஒய்வு நேரத்தில் மேற்கொள்ளப் பெறும் துறைகளாகக் கருதலாம். அறிவியல் அறிவு இருந்தால்தான் இவை யாவும் சிறந்த முறையில் அமைய முடியும்.