பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அறிவியல் பயிற்றும் முறை


۔-....--سہ۔

காட்சிகள், கற்பனைத் திறன்கள் முதலியவை வளர்ச்சியுறுகின்றன. *கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும்' ஐம்புலன்களின் மூலமாகவே அவர்கள் வெளியுலக அறிவினைப் பெறுகின்றனர் என்று கூறலாம். நேரடியான அநுபவம் இல்லாதவரை வெறும் சொற்களால் உணர்த்தப்பெறும் தகவல்கள், செய்திகள், மெய்ம்மைகள் அவர்கள் மனத்தைக் கவரா. எனவே, இந் நிலை மாளுக்கர்களுக்கு அவர்களின் அறிவு வளர்ச்சிக் கேற்றவாறு வெளியுலக அநுபவத்தைப் பெறச் செய்வதில் ஆசிரியர் மு:னதல் வேண்டும். உற்றுநோக்கச் செய்தல், சோதனைகள் செய்வதற்கு வழி ஏற்படுத்துதல், தாமாகக் கண்டறிய வாய்ப்புகளே நல்குதல், இயல்பாக தம் அநுபவத்தைப்பற்றிப் பிறருடன் கலந்து பேச வாய்ப்புகளே அளித்தல் முதலியவற்ருல் இந்த அதுபவத்தை அவர்கள் பெறச் செய்யலாம். அவை சரியான முறையில் அளிக்கப் பெறுகின்றன என்பதைக் குழந்தைகள் மேலும் மேலும் கற்பதில் காட்டும் ஆர்வத்தால் அறிந்துகொள்ளலாம். குழந்தைகள் வாழும் சூழ்கிலேயிலேயே அவை கிடைக்குமானுல் மிகவும் சிறந்தது. வகுப்பறையில் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் பழைய முறையில் கற்பிக்கப்பெறும் பாடங்களால் அவ்வதுபவத்தைப் பெறுதல் இயலாது. இடைநிலை : தொடக்க நிலையில் பெற்ற அதுபவம், ஆற்றிய செயல்கள் ஆகியவற்றிலிருந்து இடைகிலே மாளுக்கர்கள் இயற்கைப் பாடத்தைத் தொடங்குதல் வேண்டும். ஆல்ை இந் கிலே மாளுக்கர்களின் பட்டறிவு விரிந்த நிலையிலிருப்பதாலும், அவர்களின் கவர்ச்சிகளில் மாற்றம் காணப்படுமாதலாலும், இயற்கைப் பாடத்தில் செலுத்தும் கவனம் மிகவும் திட்டமான முறையில் அமையும் . எனவே, இந் நில மரணுக்கர்களிடம் வியப்புணர்ச்சி, வினவுணர்ச்சி ஆகியவற்றைத் தட்டி எழுப்பி அவை மேலும் மேலும் செயற்பட வாய்ப்புகளே நல்குதல் வேண்டும். விடுப்பூக்கம் வளர்வதற்கேற்ற சூழ்நிலையை உண்டாக்குதல் வேண்டும். கட்டுக்கம் செயற்படவும் வாய்ப்புக்களேத் தருதல்வேண்டும். இங்கில மானுக்கர்களுக்குக்கூட உற்றுநோக்கலுக்கும் தாவரங்கள், பிராணிகள் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கும் வாய்ப்புகளை நல்கி அவற்றின் வளர்ச்சியைப்பற்றிய நேர்முகமான அறிவு உண்டாகச் செய்தல்வேண்டும். அன்றியும் பூமி, காற்று, ஆகாயம் ஆகிய வற்றிலுள்ள உயிரில்லாப் பொருள்கள், நாடோறும் வாழ்க்கையில் குறுக்கிடும் சில பொறியமைப்புகள் ஆகியவற்றிலும் கவர்ச்சி பிறக்கச் செய்யவேண்டும். சற்று வளர்ந்த மாளுக்கர்களுக்கு மனிதன் இயற்கை யின் விதிகளேக் கண்டறிந்த முறைகள், அவற்றைக் கண்டறிந்ததனுல் மனிதன் அடைந்துள்ள பேராற்றல், அவை அன்ருட வாழ்வில் பயன். படும் விதம் ஆகியவற்றை உணரச் செய்தல் வேண்டும். அறிவியல் 1. குறள் - 101