பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடத்திட்டம் : பொருள் அறுதியீடு 21 پیند AMSMSASMMeeMeeeSAAAA இரண்டாவதாக : இவ்வாறு கற்கும் அறிவியல் பகுதிகளில் அறிமுறைபற்றிய அறிவியல் பகுதிகள் அதிகம் தேவையா ? பயனறி முறைபற்றிய அறிவியற் பகுதிகள் அதிகம் தேவையா ? என்பதை ஆராய்தல் வேண்டும். தேவையை யொட்டித்தான் அறிவு வளர்கின்றது என்பது அதுபவ நிலை ; அதன் அடிப்படையாகத்தான் தேவைதான் புதியது புனேதலின் தாய் என்ற ஆங்கிலப் பழமொழியும் எழுந்தது என்று கருதலாம். பிறிதொரு சாரார், அறிவுக்காகவே அறிவை நாடாவிடில், பல அடிப்படையான கண்டுபிடிப்புகள் புலனுகியிருத்தல் முடியாது என்று கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக அறிமுறை பற்றிய ஆராய்ச்சியின் விளேவாகத்தான் வெற்றிடக் குடுவை கண்டறியப்பெற்றது : மார்க்கோனி கம்பியில்லாத் தந்தியில் மின்காந்த அலேகளேப் பயன்படுத்துவதற்கு முன்னதாகவே, அவை அறி முறைபற்றிய ஆராய்ச்சியால் கண்டறியப்பட்டுவிட்டன. இவ்வாறு பலவற்றைக் காட்டலாம் என்றும், இவற்றிலெல்லாம் தேவைக்கு முன்னரே மெய்ம்மைகள் தோன்றிவிட்டன என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஏதாவது ஒரு துறையில் மட்டிலும் மனிதன் கவனம் செலுத்தியிருந்தால், அறிவியலின் வளர்ச்சி நீண்ட நாட்களுக்கு முன்னரே தடைப்பட்டிருக்கும். இரண்டு துறைகளும் இரண்டு தப்படிகள் போல மாறிமாறி இணைந்து சென்ருல்தான் அறிவியல் வளரும். எனவே, பொது அறிவியல் பாடத்திட்டத்தில் இரண்டு பகுதிகளும் இடம்பெறல் வேண்டும் என்பது பெறப்படுகின்றது. மூன்றவதாக அடிப்படையாகத் தேர்ந்தெடுக்கும் பகுதிகள் மாளுக்கர்களின் அன்ருட வாழ்க்கையில் குறுக்கிடக் கூடியனவாக இருந்தால் சாலப் பயன் தரும். அன்ருட வாழ்வில் பயன்படக்கூடிய செய்திகள் எல்லாத் துறைகளிலும் எண்ணற்றவை உள. அவற்றுள் மா ன க் க ர் க ளி ன் அறிவுநிலைக்கேற்றவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றிலுள்ள அறிவியல் மெய்ம்மைகளேயும் விதிகளேயும் விளக்குதல் வேண்டும். ஒரு சில எடுத்துக்காட்டுகள் அவர்கள் மனத்தை மிக நன்ருகக் கவர்தல்கூடும். சில மெய்ம்மைகள் அவர்கள் செயல்களைப் பற்றியனவாகவும், சில அவர்கள் உடலைப்பற்றியனவாகவும், சில அவர்கள் ஓய்வு நேர வேலேகளைப்பற்றியனவாகவும், சில அன்ருட வாழ்வில் கண்ணுறும் அல்லது பயன்படும் அநுபவங்களாகவும் இருத்தல் கூடும். எவ்வளவுக்கெவ்வளவு அவ்வதுபவங்கள் சாதாரண மானவையோ அவ்வளவுக்கவ்வளவு அவை பாடத்திட்டத்தில் இடம் பெறும் தகுதியுடையவை. இவ்வாறு பொது அறிவியல் பாடத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பெற்ற பகுதிகள் பிற்காலத்தில் பெளதிகம், வேதியியல் என்ற தலைப்புகளில் தனித்தனியாகப் பயிலுங்கால் மிக விரிவாகக் கற்பிக்கப்பெறும். ஆனால், அவை இங்கு 1. Necessity is the mother of invention,