பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அறிவியல் பயிற்றும் முறை مسیرهای مسی - میم میسی یہم۔م۔۔--~"بہ-حمہ .مهم SSAS SSAS தாய்மொழியில் வெளிவரும் அறிவியல் நூல்களேயும் கட்டுரைகளையும் படித்துத் தம் அறிவியல் அறிவை மேன்மேலும் பெருக்கிக் கொள் வதற்குத் துணையாக இருக்கும். பல துறைகளில் அடிப்படை அறிவு அமையப்பெருதவர்களால் நாடோறும் வெளியாகும் புதிய புதிய அறிவியல்பற்றிய தகவல்களே யாங்கனம் அறிந்து சுவைத்தல் முடியும் ? - 3. இளம் மாளுக்கர்களின் கவர்ச்சிகளுக்கேற்ற பகுதிகள் : அன்ருட வாழ்க்கையில் குறுக்கிடக்கூடிய செய்திகள் மாளுக்கர்களிடம் கவர்ச்சி களைத் தாண்டிவிடக் கூடும் ; வாழும் சூழ்நிலையிலுள்ள செய்திகள் அவர்கட்கு உற்சாகத்தை உண்டுபண்ணக்கூடும். விடு, போக்குவரவு, ஈடுபாட்டுக்கலே, தொழிற்சாலே, உடல் நலம், தோட்டம் முதலியவை பற்றிய சேய்திகளே அவர்கள் மிகவும் விரும்புவர். அவர்களிடம் இயல்பாகக் காணப்பெறும் திரட்டுக்கம், கட்டுக்கம், விடுப்பூக்கம் முதலியவை நன்முறையில் செயற்படுவதற்கேற்ற பகுதிகளேப் பாடத் திட்டத்தில் சேர்த்தல் வேண்டும். தாவரங்கள், பூச்சிகள், பொம்மை கள் முதலியவற்ருல் திரட்டுக்கத்தைச் செயற்படச் செய்யலாம். ஒவியங்கள் வரைதல், மண் பொம்மைகள் செய்தல் முதலியவற்ருல் கட்டுக்கத்தை வளர்க்கலாம். பல்வேறு புதியனவற்றைப் பார்ப் பதிலும் பயில்வதிலும் விடுப்பூக்கத்தைத் தூண்டலாம். மாறுபட்ட இரண்டு நிகழ்ச்சிகள் அவர்கள் மனத்தைக் கவர்தல் கூடும். பழைய இரசவாதியின் அறையையும் நவீன அறிவியல் அறிஞனின் ஆய்வகத்தையும் விளக்கும் படங்கள், முதன் முதலாகக் கண்டறிந்த நீராவிப் பொறிக்கும் நவீன தாமியங்கிக்கும் உள்ள வேறு பாடுகள், முதன் முதல் பறந்த வானவூர்திக்கும் நவீன விமானத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஆகியவை போன்ற பல்வேறு முரண்பட்ட செய்தி கள் அவர்கள் பாடத்திட்டத்தில் அமையலாம். - நவீன கண்டுபிடிப்புகளில் இளே ஞர்கள் அக்கறை கொள்வது இயல்பு ; அவற்றை விருப்பத்துடன் பயிலவும் கூடும். X-கதிர்கள், ஊதா மேற்கதிர்கள், சிவப்புக் கீழ்க் கதிர்கள், கம்பியில்லாத் தந்தி அலேகள், வானுெலி அலைகள், பல்வேறு மின்காந்த அலேகள், இரேடியம் பற்றிய செய்திகள், அணுவின் ஆற்றல்பற்றிய விவரங்கள், விண் வெளிச்செலவு, விண்வெளி ஆராய்ச்சி, தொலை உலகச்செலவு, பிளாஸ்டிக்கின் வளர்ச்சி, அது பயன்படும் துறைகள், பென்சிலின் போன்ற நவீன மருந்து வகைகள், நவீன சிகிச்சை முறைகள் ஆகியவைபற்றிய பகுதிகளே இளைஞர்கள் மிகவும் விரும்புவர். அப் பகுதிகளே விளக்கும்பொழுது இடைஇடையே அவை வரலாற்று முறையில் வளர்ந்த படிகளைக் குறிப்பிடலாம். வரலாற்று உண்மை களில் அதிக கவனம் செலுத்தாது கண்டறிந்த அறிஞர்களின் வாழ்வில் நேரிட்ட ஒரு சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டுப் பகுதிகளை விளக்கில்ை