பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் முறை. - 4? یا " அறிவியல் முறையின் மூன்று நிலைகள் : அறிவியலேப் பயில்வதால் அறிவியல் முறையில் பயிற்சியினைப் பெறுவதாக முன்னர்க் குறிப்பிட்டோம். அறிவியல் முறை என்பது யாது ? ஈண்டு அதைச் சற்று விரிவாக ஆய்வோம். அ றி வி ய ல் முறையில் பல படிகள் உள்ளன. அவை யாவும் ஒரு காலத்தில் ஒருவரால் கண்டறியப்பெற்றவை அல்ல. அறிவியல் வரலாற்றைப் படித்தால் இம்மெய்ம்மை நன்கு புலனுகும். அறிவியல் முறையின் வரலாற்றைப் பற்றியே பல நூல்கள் வெளிவந்துள்ளன. கூர்ந்து நோக்கினுல் அறிவியல் முறை வளர்ச்சியில் மூன்று நிலைகளைக் காணலாம். முதல் நிலை : அரிஸ்டாட்டிலும் கி. மு. 384-322) ஃபிரான்சிஸ் பேக்கன் என்பாரும் (கி. பி. 1561-1628) கண்ட முறைகள்தாம் இந்நிலையில் உள்ளவை. இந்நிலையை உற்று நோக்கல் முறை’ என்றும் கூறலாம். தொடங்கும் கிலே தெளிவாகவும் பிரச்சினை எளிதாகவும் இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்கு இங்கிலே மிகவும் ஏற்றது. இரண்டாம் கிலே இது கலிலியோ (கி. பி. 1564-1642) கண்ட முறையாகும். இதை முயற்சி முறை (Method of Trial) என்றும் வழங்கலாம். இந்நிலையில் பிரச்சினேயைத் தெளிவாகவும் எளிதாகவும் கூறி, அதைப் பரிசீலனே செய்தல் வேண்டும். ஒரு சில விடைகளே ஏற்றுக்கொண்டு அவற்றை மீண்டும் சோதித்தல் வேண்டும் முடிந்தால் அவ்விடையைப் பிறிதொரு செயலிலும் பொருத்திப் பார்க்கச் செய்யலாம். - மூன்ரும் கிலே : முதல் இரண்டு கிலேகளும் பயன்படாதபொழுது இந்திலேயை மேற்கொள்ளலாம். இது சர் ஐசக் கியூட்டன் (கி. பி. 1642-1727 கண்ட முறையாகும். இதை அனுமானங்களைச் சோதிக்கும் முறை என்றும் வழங்குவர். இம்முறைப்படி மானுக்கர்கள் பிரச்சினைக்குத் தொடர்புள்ள தகவல்களேத்திரட்டுவர்; அவற்றிலிருந்து சில விடைகளேக் கண்டு, மிக முக்கியமானவற்றைப் பொறுக்கி யெடுப்பர் : அவ்விடைகள் சரியானவையாக இருந்தால் அவற்றின் விளைவுகளே முன்னதாகவே இப்படியிருக்கலாம் என்று கூறுவர் : இறுதியாக அனுமானங்களேச் சோதனைகள் மூலம் பரிசீலிப்பர் : முடிந்தால் சரியான விடைகளைப் பிறிதொரு செயலிலும் பொருத்திப் பார்ப்பர். இனி, மூன்று நிலைகளாக வளர்ந்த அறிவியல் முறையைச் சற்று விரிவாக விளக்குவோம். ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளும் பொருளை ஒரு பிரச்சினேயாகக் கூறுவதே அறிவியல் முறையின் முதற்படியாகும். 1. இந்நூல் பக். 8. 2. Burniston Brown, G : Science : Its method and its philosophy.