பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பயிற்றும் முறைகள்-2 கவீன கல்வி அறிஞர்கள் கண்ட ஒரு சில புதிய முறைகளை ஈண்டுக் காண்போம், 1. தாமாகக் கண்டறியும் முறை கி.பி. 1790-இல் பிரீஸ்டிலி என்பார் வேதியியலைப் பள்ளிப் பாடமாக்க வேண்டும் என்றும், கண்டறியும் பாணியில் அதனைப் பயிற்ற வேண்டும் என்றும் கூறினர். பெஸ்டலாஸி, லாக்கே, ரூஸோ என்ற அறிஞர்களும் இம்முறையில் கற்பித்தலே சாலப் பயன் தரும் என்று கருதினவர்கள். குழந்தையின் தனிவீறை ஆசிரியர் நன்கு மதிக்க வேண்டும் என்றும், ஆராய்ச்சிதான் செய்திகளே யறிந்து கொள்ளச் சிறந்த வழியாகும் என்றும் கூறினர் பிரீஸ்டிலி ; புதியது புனேந்த அறிவியலறிஞன் சென்ற வழியிலேயே குழந்தைகளையும் செலுத்தும் முறை யொன்றினேக் காண வேண்டும் என்று எண்ணினர். ரூஸோவின் முறையும் இப் பாணியையே அவாவி நின்றது. குழந்தை செப்திகளே மனப்பாடம் செய்து அறிவியலேக் கற்பதைத் தவிர்த்து, தன் சொந்த முயற்சியால் விதிகள்ேக் காண வேண்டும் என்பது ரூஸோவின் ஆசை. இந் நிலையில் கி. பி. 1889-இல் இங்கிலாந்து காட்டில் எச். இ. ஆர்ம்ஸ்ட்ராங் என்பார் தாமாகக் கண்டறியும் கொள்கையை வேதியியல், பெளதிக இயல் ஆகிய பாடங்களைப் பயிற்றுதலில் கையாண்டார். - ஆர்ம்ஸ்ட்ராங் கருத்துப்படி ஆசிரியர் மானக்கனப் புதிய பொருளேக் கண்டறியும் அறிவியல் அறிஞன் நிலையில் வைத்து விதியினயோ பிறவற்றையோ தானுகக் கண்டறியும் வாய்ப்பின நல்க வேண்டும். தொடக்கநிலைப் பள்ளிச் சிறர்களிடமும் உற்று நோக்கல் திறனே வளர்க்க வேண்டும் என்றும், பாடநூலிலிருந்து வெறும் கொள்கைகளே மனப்பாடமாகக் கற்பதை நிறுத்தி அவற்றை மாளுக்கன் தானுகவே கண்டறிய வேண்டும் என்றும், செய்திகளே வானாயிருந்து வாங்கிக் கொள்வதை நீக்கிச் சிந்தனேக்கு வேலே தரும் முறையில் அவற்றைப் பெறுதல் வேண்டும் என்றும் ஆர்ம்ஸ்ட்ராங் கருதிர்ை. இம் முறையைப்பற்றி அவர் கூறுவதாவது : புதிதாகக்