பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அறிவியல் பயிற்றும் முறை படங்கள் வரைவதற்கும் வேண்டிய அளவு இடமும் அதில் இருக்கும். சிந்தனையைக் கிளறும் சில வினுக்களேயும் அவ்வேடுகளில் காணலாம். இம்முறை கவர்ச்சிகரமானதாகவும் அறிவூட்டவல்லதாகவும் அமையவேண்டுமானுல் தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரச்சினேகள் தெளிவி லிருந்து சிக்கலுக்குப் போகும் முறையில் படிப்படியாக அமைத்து இருத்தல்வேண்டும். அன்றியும், அவை உற்சாகம் ஊட்டும் முறையிலும் அமைந்திருத்தல் வேண்டும் : அவற்றைப் பார்த்தவுடனே அவற்றில் மரணுக்கர்கள் ஈடுபடல்வேண்டும். இன்னும் அவை புலனடானவையாக இருந்தால், மாளுக்கர்கள் இயல்பாகவே அவற்றில் ஈடுபடுவர். பிரச்சினேகளும் ஒன்ருேடொன்று தொடர்புடையனவாகவும் இணைந்தும் இருக்கவேண்டும். தொடர்பற்ற பிரச்சினேகள் அறிவியல் பாடத் திற்கு ஏலாதவை. இம்முறையை மேற்கொள்ளும் ஆசிரியரின் முன் ஆயத்தம் திட்ட மாகவும் முற்றுப்பெற்றதாகவும் இருத்தல் வேண்டும். வாய்மொழி ஆய்வாலும் திறமையான வினவலாலும் பாடத்தில் கவர்ச்சியை உண் டாக்கலாம் ; ஆர்வத்தையும் எழுப்பலாம். பிரச்சினைகளேத் தீர்க்க வேண்டியதன் இன்றியமையாமையை மாளுக்கர்கள் உணரச் செய்வது தான் இதன் மிகவும் முக்கியமான கூறு ஆகும். நிறைகள் : கற்றலின் நோக்கத்தையும் கற்கும் வழிகளையும் இம்முறை கல்குகின்றது. கற்றலில் மாணக்கர்கள். முக்கிய பங்கு கொள்ளுகின்றனர் ; எனவே, இதில் பெரும் கல்விப் பயனே எதிர் பார்க்கலாம். சில பிரச்சினேகள் நிறைமதியினரை அறை கூவுவது போல அமைந்து அவர்களே ஆழ்ந்த படிப்பில் கொண்டுசெலுத்த வாய்ப்புகளைத் தருகின்றன. குறைகள் : சிந்திக்கும் ஆற்றல் கைவரப்பெற்ற உயர்நிலைப் பள்ளி மானுக்கர்களுக்கு மட்டிலும்தான் இம்முறை ஏற்றது. பிரச்சினை கஅளச் சரியான முறையில் தேர்ந்தெடுக்காவிடினும், ஆசிரியர் மாளுக்கர் களுக்குச் சரியான முறையில் வழிகாட்டாவிடினும், ஆயத்தம் நல்ல முறையில் அமையாவிடினும் மாளுக்கர்களின் ஆர்வம் அறிவியல் பாடத் தில் குன்றக்கூடும். வளர்ச்சி முறையுடன் இம்முறை இணைந்து சென்ருல் நல்ல பலனைக் காணலாம். அறிவியல் பாடத்தில் சோதனைகள் அதிகமாகச் செய்ய வேண்டிய பகுதிகளைக் கற்பிக்கும்பொழுது இம்முறையை மேற் கொள்ளலாம். - 3. டால்ட்டன் திட்டம் “டால்ட்டன் திட்டம்’ என்பது கற்பித்தலில் மேற்கொள்ளப்பெறும் புதியதொரு முறையாகும். அமெரிக்க நாட்டில் டால்ட்டன் என்னும் I sssrs Jā.–85 .