பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அது ஒர் இரட்டைச் சாய்தளம்.

32. சாய்வுக் குறைவான படிக்கட்டு, சாய்வு அதிகமுள்ள படிக் கட்டு. இவ்விரண்டில் எதில் எந்திர இலாபம் அதிகம்?

சாய்வு அதிகமுள்ள படிக்கட்டு.

33. சாய்வுக் கோணம் என்றால் என்ன?

புவி மேற்பரப்பில் குறிப்பிட்ட புள்ளியிலுள்ள கிடைத் தளத்திற்கும் புவிக்காந்தப் புலத்திற்கும் இடையிலுள்ள கோணம்.

34. சாய்வுக் கோணத்தை எவ்வாறு அளக்கலாம்?

சாய்வுமானியால் அளக்கலாம்.

35. சமநிலை என்றால் என்ன?

ஒரு பொருள் கீழே விழாத நிலை.

36. சமநிலை எத்தனை வகை?

உறுதிச் சமநிலை - பம்பரம் நேராக இருத்தல். புவி ஈர்ப்பு புள்ளி தாழ்வு. உறுதியிலாச் சமநிலை - பம்பரம் தலைகீழாக நிறுத்தும் பொழுது கீழே விழுதல். புவி ஈர்ப்புப் புள்ளி உயர்ந்திருத்தல். நடுநிலைச் சமநிலை - பம்பரம் படுக்கை நிலையில் இருத்தல். புவி ஈர்ப்புப் புள்ளி உயர்வதுமில்லை தாழ்வதுமில்லை.

37. முறுக்கம் என்றால் என்ன?

ஒரு முறுக்கு அல்லது இரட்டையினால் உண்டாக்கப் படும் திருகிய உருத்திரிபு.

38. முறுக்குத்தராசு என்றால் என்ன?

முறுக்குக் கோணத்தை ஏற்படுத்தும் சிறிய விசைகளை (ஈர்ப்புவிசை) அளக்க இத் தராசு பயன்படுவது.

39. முறுக்க நெறிமுறை எதில் பயன்படுகிறது?

மின்னோட்டத்தை நுட்பமாக அளக்கும் ஆடி மின்னோட்டமானியில் பயன்படுகிறது.

40. முறுக்குத் தராசைப் பயன்படுத்திய இரு அறிவியலார் யார்?

காவண்டிஷ், கூலும்.

41. விரிவுமானி என்றால் என்ன?

ஒரு பொருளில் தகைவை ஏற்படுத்தி அது உண்டாக்கும் திரிபை அளக்கப் பயன்படுங் கருவி.