பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

செல்வதைக் கட்டுப்படுத்தும் பகுதி. சமனாழி அல்லது ஊசல் அடிப்படையில் அமைந்திருக்கும் கருவியமைப்பு.

52. விடுபடுவிரைவு என்றால் என்ன?

நிலவுலகிலிருந்து ஒரு பொருள் புவி ஈர்ப்பைத் தாண்டிச் செல்ல வேண்டிய விரைவு. இது ஒரு வினாடிக்கு 11.2 கி.மீ.

53. கெய்கர் எண்ணி என்றால் என்ன?

கதிரியக்கத்தை ஆராய்ந்து ஆல்பா, பீட்டா, காமா கதிர்களின் வலுவை அளக்குங் கருவி. இதனால் குழாய்களில் ஏற்படும் நீர்மக்கசிவை அறிய இயலும்.

54. ஆளி (கவர்னர்) என்றால் என்ன?

எந்திரங்களின் விரைவைச் சீராக்குங் கருவி.

55. வாட்டம் என்றால் என்ன?

1. கிடைமட்டத்திற்குச் சார்பான சரிவளவு.
2. தொலைத் தொடர்பாக அளவில் ஏற்படும் மாற்றவீதம் - பளுமானி அளவீடுகள்.

56. சுழல் கவராயம் என்றால் என்ன?

இதில் காந்தம் இல்லை. ஆகவே, காந்தப்புயல்களால் இது தாக்குறுவதில்லை. இதை அமெரிக்க எல்மர் பெரி இதனை 1911இல் புனைந்தார்.

57. சுழல்நோக்கி என்றால் என்ன?

சுழல்பொருள்களின் இயக்கத்தை விளக்க உயர்விரைவில் சுழலும் உருளையுள்ள கருவி. கப்பலை நிலைப்படுத்துங் கருவி.

58. கேட்டர் ஊசல் என்றால் என்ன?

ஹேன்றி கேட்டர் வடிவமைத்த அரிய ஊசல், தடையிலா வீழ்ச்சியின் முடுக்கத்தை அளக்கப் பயன்படுவது.

59. பருப்பொருள் இயக்கவியல் என்றால் என்ன?

பொருள்களின் இயக்கத்தை ஆராயுந்துறை. இயக்க வியலின் பிரிவு.

60. விசை இயக்கவியல் என்றால் என்ன?

இயக்கத்தை உண்டாக்க அல்லது மாற்றவல்ல விசை விளைவை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு.