பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82



24. எதிரொலிப்பான் என்றால் என்ன?

கப்பலுக்குக் கீழுள்ள நீரின் ஆழத்தைக் காணும் கருவி. இந்நெறிமுறை சோனார் கருவியில் உள்ளது.

25. எதிரொலிக் கூடம் என்றால் என்ன?

வானொலி நிலையத்திலுள்ள எதிரொலிக்கும் அறை. பதிவு செய்யப்படும் ஒலியோடு உண்டாக்கப்படும் எதிரொலி விளைவுகள் சேர்க்கப்படுகின்றன.

26. எதிரொலியால் இடமறிதல் என்றால் என்ன?

வெளவால்கள், டால்பின்கள் ஆகியவை மீஒலி மூலம் பொருள்கள் இருக்குமிடத்தை அறிதலுக்கு இப்பெயர்.

27. லேப்லாஸ் திருத்தம் என்றால் என்ன?

ஒலிபரவும் ஊடகத்தின் அழுத்தம் மற்றும் பரும மாற்றங்கள், மாறா வெப்பநிலை மாற்றங்களாக அமைவதில்லை. இக்கருத்தின் அடிப்படையில் இவர் நியூட்டன் தொடர்பை மாற்றியமைத்தார்.

28. இசை என்றால் என்ன?

ஒழுங்கானதும் சீரானதுமான அதிர்வுகளால் உண்டாகும் இனிய ஒலி.

29. இசை ஒலியின் பண்புகள் யாவை?

1. இசைப்பு. 2. வலிமை. 3. பண்பு.

30. ஓசை என்றால் என்ன?

ஒழுங்கற்றதும் சீரற்றதுமான அதிர்வுகளால் உண்டாகிறது. இதை இரைச்சல் என்றுங் கூறலாம்.

31. ஒலிமீட்பு என்றால் என்ன?

நாடாப் பதிவியில் பதிவு செய்த ஒலியை மீண்டும் கேட்குமாறு செய்தல் ஒலிமீட்பாகும்.

32. ஒலிமீட்பின் பயன் யாது?

வானொலி நிகழ்ச்சிக்கு வேண்டிய இசை, சொற்பொழிவு, நேர்காணல் முதலிய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே பதிவு செய்து வேண்டிய நேரத்தில் அவற்றை ஒலிபரப்ப ஒலிமீட்பு உதவுவது.


33. எதிர்முழக்கம் என்றால் என்ன?

ஒர் அறையில் உண்டாக்கப்படும் வன்னொலி அலைகள்