44.
45.
46.
47.
48.
49.
50.
51.
145
செய்யும்.
விலக்கக் கோணம் என்றால் என்ன? எதிர் மின்வாய்க் கதிர்க்குழாய் மின்னணுக்கற்றையின் கோணம்.
படுஉயர்கோணம் என்றால் என்ன? கிடைமட்டத்தோடு அமையுங் கோணமிது. வானூர்தி யின் முதுகுக்கோடு உடலின் அடியைச் சேர்க்கும் குறுக்குக் கோட்டினால் உண்டாவது. விடுகோணம் என்றால் என்ன? அலைவாங்கியிலிருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றலின் பெரும் உமிழ்வின் உயர்ச்சி அல்லது ஏற்றக் கோணம்.
இடைக்கோணம் என்றால் என்ன? ஒரிடத்தில் புவியின் அச்சுக்கும் காந்த அச்சுக்கும் இடையே உள்ள கோணம். இது புவியின் ஒவ்வோரிடத் திலும் கணக்கிடப்படுவது. இறக்கக்கோணம் என்றால் என்ன? வேறு பெயர் வீழ்கோணம். கிடைமட்டத்திற்குக் கீழ் அளக்கப்படும் செங்குத்துக் கோணம். உற்றுநோக்கிய புள்ளியை நில அளவையர் அளக்கும்பொழுது ஏற்படுவது. திரிபுக்கோணம் என்றால் என்ன? ஒரு முப்பட்டகத்தின் வழியாக ஒளி செல்லும் பொழுது, விடுகதிருக்கும் படுகதிருக்கும் இடையிலுள்ள கோணம். சாய்வுக் கோணம் என்றால் என்ன? சரிவுக் கோணம். புவி மேற்பரப்பில் குறிப்பிட்ட புள்ளி யிலுள்ள கிடைத்தளத்திற்கும் புவிக்காந்தப் புலத்திற்கும் இடையிலுள்ள கோணம். உராய்வுக் கோணம் என்றால் என்ன? இரு பொருள்களின் பரப்புகள் தொட்டுக் கொண் டிருக்கும்பொழுது, செங்குத்துக் கோட்டிற்கும் அவற்றிற் கிடையே உள்ள தொகுபயன் வினைத் திசைக்கும் நடுவே அமையும் கோணம். சார்பு நழுவலை ஒரு விசை உண்டாக்க முனையும் பொழுது ஏற்படுவது.
ら・tC)・