பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91.

92.

95.

151

வேறுபட்ட உருவங்கள். ஆனால், இடவடிவியலில் அவை சமமானவை. ஏனெனில், தொடர் உருத்திரிபால் ஒன்றை மற்றொன்றாக மாற்றலாம். வளைதளம் கோணத்திற்குச் சமமானது ஆகாது. ஏனெனில், பரப்புகளை முறிக்காமலும் இணைக்காமலும் கோளத்தை வளை தளமாக மாற்ற இயலாது.ஆகவே, வளைதளம் என்பது கோளத்திலிருந்து வேறுபட்ட வடிவமாகும். வடிவ வகைகள் அவற்றின் பண்புகள் ஆகியவற்றையும் இடவடிவியல் ஆராய்வது.இதில் ஒரு தனிநிலை இதுவே. முடிச்சுகளின் பண்புகளையும் கோடுகளின் வலைப் பின்னலையும் ஆராய்வது. கோனிஸ்பக் பால சிக்கல்களை ஆய்ல ஆராய்ந்தது இட வடிவியலில் தொடக்க காலப் பயன்களில் ஒன்று. மின் கற்றுகளைப் பகுத்துப் பார்ப்பது தற்கால எடுத்துக்காட்டு. கம்பிகளின் வழியைத் துல்லியமாகக் காட்டும் படமன்று மின்சுற்றுப் படம். ஆனால், அது சுற்றின் வேறுபட்ட இடங்களுக்கிடையே உள்ள இணைப்பு இடங்களைக் காட்டுவது. அதாவது, இட வடிவியல் முறையில் அது சமமானது. அச்சிட்ட அல்லது ஒருங்கிணைந்த சுற்றுகளில் ஒன்றை மற்றொன்று கடக்காதவாறு இணைப்புகளை அமைக்க வேண்டும். உயர் இயற்கணித முறைகளை இட வடிவியலில் பயன் படுத்துவது. இவற்றில் தொகுதிக் கொள்கை, கணக் கொள்கை ஆகியவை அடங்கும். வடிவொத்த என்றால் என்ன? அளவில் மாறுபட்டு வடிவத்தில் ஒன்றாக இருக்கும் இரண்டிற்கு மேற்பட்ட உருவங்களைக் குறிப்பது. வடிவொத்த கோணங்கள் என்றால் என்ன? ஒத்த கோண அளவுகள் சமமாகவும் ஒத்த பக்கங்கள் ஒரே வீதத்திலும் இருக்கும் முக்கோணங்கள். பல்கோணம் என்றால் என்ன? பல நேர்ப் பக்கங்களால் எல்லைப்படுத்தப்படும் கன உருவம். ஓர் ஒழுங்கு பல்கோணத்தில் எல்லாப் பக்கங்களும்

எல்லா உட்கோணங்களும் சமம். n பக்கங்கள் உள்ள