பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.

12.

13.

23

நழுவுகோல் என்றால் என்ன? மடக்கை அளவுகள் குறிக்கப் பெற்ற கணக்கிடுங் கருவி அமைப்பு. எண்களைப் பெருக்கப் பயன்படுவது. கணக்கிடுங்கருவி என்றால் என்ன? கூட்டல், கழித்தல் முதலிய அடிப்படைச் செயல்களைச் செய்யப் பயன்படுங் கருவி அனைவரும் பயன்படுத்துவது. கணிதத்தில் கணிப்பொறியின் பயன் யாது? எவ்வகைச் சிக்கலையும் தீர்க்கும் ஒரு வியத்தகு மின்னணுக் கருவியமைப்பு இது.

4. இந்தியக்கணித மேதைகள்

எண்களை எண்ணும் முறை பழங்காலத்தில் எது வரை இருந்தது? இந்தியர்கள் 10 வரையிலும் கிரேக்கர்கள் 10 வரையிலும் உரோமானியர்கள் 10 வரையிலும் எண்ணினர். திருவள்ளுவர் ஆண்டு முறையை விளக்குக. தை முதல் மார்ச் வரையுள்ள காலம் திருவள்ளுவர் ஆண்டு.இது கிறித்துவ ஆண்டைவிட31ஆண்டுகள் முந்தி யது. எ-டு. கி.பி. 2002 + 31 = 2033 திருவள்ளுவர் ஆண்டு. நாள்மிகையாண்டு என்றால் என்ன? லீப் ஆண்டு. நான்காண்டிற்கு ஒரு முறை பிப்ரவரியில் 29 நாட்கள் கொண்ட ஆண்டு. மெரார்ஜி தேசாய் பிப்ரவரி 29இல் பிறந்தவர். ஆகவே, அவருக்குப் பிறந்த நாள் நான்காண்டிற்கு ஒரு முறை வந்தது. சுலுப சூத்திரங்கள் என்பவை யாவை? இவை இந்தியர்கள் கண்டறிந்தவை. பித்தகோரஸ் தேற்றத்தோடு ஒப்பிடத்தக்கவை. இந்தியர்கள் அறிந்திருந்த வீதமுறா எண்கள் யாவை? N2, 3. இவற்றின் மதிப்புகளை உயர் தோராய அளவுக்கு அறிந்திருந்தனர். சுழி என்னும் கருத்து எப்பொழுது இந்தியர்களால் கண்டு பிடிக்கப்பட்டது?