பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25



14. பிஜா கணிதம் எப்பொழுது தோன்றியது?
1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம்.

15. இக்கணிதத்தை உருவாக்கியவர் யார்?
இந்தியக் கணிதமேதை பாஸ்கராச்சார்யா. இவர் பிஜா கணிதம் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார்.

16. பாஸ்கரரின் சிறப்பு என்ன?
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த இந்தியக் கணக்கறிஞர். இவர் தொகை நுண்கணிதத்தை நிறுவியவர். நியூட்டன், இலய்பினிட்ஸ் இருவருக்கு முன்னரே எந்த உறுப்பை சுழியால் வகுத்தாலும் கிடைப்பது முடிவிலி (infinity) என்று உறுதியாகக் கூறியவர். இது சுழற்சிமுறை இயற்கணிதச் சமன்பாடுகளைத் தீர்ப்பதற்கு உருவாக்கப்பட்டது. இது இவர்தம் சிறந்த பங்களிப்பு. இதை மேனாட்டுக் கணித அறிஞர்கள் நேர்மாறு சுழற்சி (inverse cyclic) என்றனர். இவர் சிறந்த கணித நூல் சித்தாந்த சிரேமணி.

17. இவரை இந்திய அரசு எவ்வாறு சிறப்பித்தது?
இந்தியா தான் இரண்டாம் தடவையாக ஏவிய இரு செயற்கை நிலாவிற்கும் பாஸ்கரா என்று பெயர் அளித்தது. பாஸ்கரா - 1 1979 ஜூன் 7இலும், பாஸ்கரா - 2 1981 நவம்பர் 20இலும் ஏவப்பட்டன.

18. லீலாவதியின் சிறப்பென்ன?
பாஸ்கரரின் அருமை மகள் இவர். திருமணமான ஒரு வாரத்திற்குள் இவர் கணவர் இறந்துவிட்டார். பாஸ்கரர் தம் மகள் பெயரில் ஒர் இயலையே சித்தாந்த சிரோமணியில் சேர்த்திருந்தார். இது லீலாவதி கணக்குகள் எனப்படும். தம் மகள் நினைவாக இவர் இதைச் செய்தார். லீலாவதி கணக்கு தெரிந்திருந்தால், ஒரு கிளையின் இலைகளைக் கூட ஒருவர் எண்ணிவிடலாம். அந்த அளவுக்குத் துல்லியம் வாய்ந்தது.

19. பிரமகுப்தாவின் சிறப்பென்ன?
இவர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியக் கணக்கறிஞர். சுழிச்செயலுக்குரிய விதிகளை முதன்