31
25. இராமானுஜனின் சிறந்த கல்லூரி நண்பர் யார்?
இராதா கிருஷ்ண அய்யர்.
26. இராமானுஜன் உயர்வுக்கு உரிய காலத்தில் உதவியவர்கள் யார்?
திவான் பகதூர் இராமச்சந்திர ராவ், சி.எல்.டி. கிரிபத், சென்னைப் பொறியியல் கல்லூரி, நாராயண அய்யர், துறைமுகக் கழகம், பி.வி. சேஷூ அய்யர்.
27. இராமானுஜனின் கணிதத் திறமையை உலகுக்கு அறியச் செய்ய உதவியவர் யார்?
சர் பிரான்சிஸ் ஸ்பிரிங், சென்னைத் துறைமுகத் தலைவர்.
28. இராமானுஜன் இலண்டனில் எந்தக் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார்?
டிரினிடி கல்லூரி.
29. சென்னைத் துறைமுகத் தலைவர் யார்?
சர். பிரான்சிஸ் ஸ்பிரிங். இவரே அவ்வலுவலகத்தில் இராமானுஜத்திற்கு வேலை தந்தவர்.
30. உடல் நலக் குறைவு காரணமாக இராமானுஜன் சென்னையிலிருந்து குடந்தை புறப்பட்டபோது இராதாகிருஷ்ணனிடம் கூறிய நெஞ்சை உருக்கும் சொற்கள் யாவை?
இராமானுஜன் இரு குறிப்புச் சுவடிகளை இராதாகிருஷ்ணனிடம் கொடுத்துக் கண்ணீர் மல்கக் கூறியதாவது: “நான் இறந்துவிட்டால் தயவு செய்து இந்தக் குறிப்புச் சுவடிகளைப் பேரா. சிங்காரவேலு முதலியாரிடமோ கிறித்துவக் கல்லூரி பேரா. எட்வர்ட் பி. ரோசிடமோ கொடுத்துவிடுங்கள்”
31. இராமனுஜன் எஃப்.ஏ. தேர்வில் எத்தனை தடவை தோல்வியுற்றார்?
மூன்று தடவைகள்.
32. கணிதமேதை பேரா. ஹார்டிக்கு இராமானுஜன் எழுதிய கடிதத்தின் விளைவு என்ன?
இது அவர் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது இந்தியாவிற்கு என்று கணிதத்தில் ஒரு தனியிடத்தைப்