பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100



மூதாதை வகையிலிருந்து மரபுவழியில் உடன் வேறுபடுதலுக்குச் சடுதிமாற்றம் என்று பெயர்.

67. சடுதிமாற்றக் கொள்கையை யார் எப்பொழுது முன் மொழிந்தார்?

டச்சு தாவரவியலார் டிவைரைஸ் ஹயூகோ. 1901இல் முன்மொழிந்தார்.

68. இம்மாற்றத்தின் இயல்பு யாது?

இம்மாற்றம் மரபணுக்களில் ஏற்படுவது. ஆகவே, இதற்குக் கால்வழிப்பண்புண்டு. திட்டவட்டமான பண்புகள் உயிரிகளில் உண்டாகின்றன.

69. இணைமாற்றுகள் (அலீல்ஸ்) என்றால் என்ன?

இரண்டிற்கு மேற்பட்ட மரபணுக்கள் ஒன்றுக்கொன்று மாற்றாக அமைதல். மெண்டல் விதிப்படி மரபு உரிமை பெற்ற ஓரிணை மாற்றுப் பண்புகளில் ஒன்று.

70. இணைமாற்றுகள் எவ்வாறு அமைகின்றன?

1. குன்றல்பிரிவில் ஒரே கண்ணறையில் இரட்டிக்கும் ஒத்த நிறப்புரிகளை பொறுத்தவரை, அவை ஒரே இருப்பிடத்தில் இருப்பவை.
2. ஒரே தொகுதி வளர்ச்சி முறைகளில் அவை வேறுபட்ட விளைவுகளை உண்டாக்கும்.
3. ஒன்று மற்றொன்றாகச் சட்டென்று மாற்றமடையும்.

20. தாவர உயிரி தொழில்நுட்பவியல்

1. படியாக்கம் என்றால் என்ன?

ஓர் உயிர்ப்பொருளின் சரிநிகர் நகலை உருவாக்கல் படியாக்கம் எனப்படும்.

2. படியாக்கத்திலுள்ள நுட்பம் என்ன?

உயிரணுவிலுள்ள உட்கருமாற்றம் ஆகும்.

3. மறுபடியாக்கம் என்றால் என்ன?

மரபணுப் பொருளின் துல்லிய படிகளை எடுக்கும் நுட்பம். இதைக் கொண்டு டிஎன்ஏ, ஆர்என்ஏ