பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105



எல்லா நிலைகளும் ஆராயப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் இப்பேரவையில் மேற்கொள்ளப்பட்டன.

33. வேம்புப்பொன் என்றால் என்ன?

நல்ல பயன் தரும் சூழ்நிலைத்தகவுள்ள தொற்றுக் கொல்லி, வேம்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பேரா. கோவிந்தாச்சாரியாரும் அவர்தம் குழுவினரும் உருவாக்கியது. (1994)

34. தேசிய வேளாண் அறிவியல் பேரவை என்பது யாது?

இந்திய வேளாண் வளர்ச்சிக்காக உள்ள அமைப்பு. இதன் 2ஆம் மாநாடு அய்தராபாத்தில் 1995 ஜனவரியில் நடந்தது. இதன் தலைமை உரை வேளாண் அறிஞர் டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

21. பசுமைப்புரட்சி வித்தகர் பால்

1. பால் என்பவரின் முழுப் பெயர் என்ன?

பெஞ்சமின் பியரி பால்.

2. இவர் எம் மாநிலத்தவர்?

பஞ்சாப் மாநிலத்தவர்.

3. இவர் எப்பொழுது பிறந்தார்?

1906 மே 26.

4. தொடக்கக் கல்வியை எங்குக் கற்றார்?

பர்மாவில் கற்றார்.

5. அவர் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் நாட்களில் எப்படி விளங்கினார்?

சிறந்த மாணவராதலால் பல பரிசுகளும் உதவித் தொகைகளும் வாங்கினார்.

6. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு எதற்குச் சென்றார்?

அங்கு ஐந்தாண்டுகள் தங்கித் தம் முனைவர் பட்டப்படிப்பை முடித்துப் பர்மா திரும்பினார். சென்ற ஆண்டு 1929.