பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107



17. எபி 809 இன் சிறப்பென்ன?

மூன்று துருவகை நோய்கள் உள்ளன. இம்மூன்றையும் இது எதிர்த்தது. இதனால் கோதுமை உற்பத்தி அதிகம் ஏற்பட்டது. இந்த அருஞ்செயலுக்காக உலகம் முழுதும் இவரைப் பாராட்டியது.

18. 1965இல் அவர் அடைந்த உயர் பதவி என்ன?

அப்பொழுதுதான் புதுதில்லியில் இந்தியா வேளாண் ஆராய்ச்சி மன்றம் நிறுவப்பட்டது. அதன் இயக்குநரானார் இவர்.

19. அவர் செய்த குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி என்ன?

ரோஜாக்களில் அவர் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி செய்துள்ளார். 40க்கு மேற்பட்ட வகைகளை உருவாக்கி உள்ளார். இது குறித்து அவர் ஒரு நூலும் எழுதியுள்ளார். இந்திய ரோஜாக்கள்.

20. அவர் பணியின் சிறப்பென்ன?

இயக்குநராக இருந்தபொழுது, பல நல்ல பணிகளைச் செய்துள்ளார். அதனால் இன்று இந்தியா வேளாண் முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ளது. அவர்தம் திட்டங்களாலும் ஆராய்ச்சிகளாலும் பசுமைப் புரட்சி இந்தியாவில் தோன்றிற்று.

21. அவர் பெற்ற பரிசுகள் யாவை?

வேளாண் அறிவியலுக்கு ஆற்றிய தொண்டிற்காக, அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

1. ஏபி அகமத் கித்வாய் பரிசு.
2. பிர்பாய் சாகினி பதக்கம.
3. எஸ். இராமானுஜன் பதக்கம்.
4. 1972இல் இலண்டன் அரசர் கழக உறுப்பினர் ஆனார்.

22. ஆய்வுக்குழாய்க் கருவுறுதலை அவர் எவ்வாறு செய்தார்?

ஒரு தனி ஊட்டக் கரைசல் ஆய்வுக் குழாயில் கெட்டியாக்கப்பட்டது. புரையில்லாத நிலைமைகளில் சில சூல்களும் மகரந்த மணிகளும் ஊடகத்தில் தெளிக்கப்பட்டன. நாளாவட்டத்தில் மகரந்த மணிகள் முளைத்தன. மகரந்தக் குழாய்கள், வளர்ந்த சூல்கள் நோக்கிச்-