பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109



நோபல் பரிசு பெற்ற என். இ. போர்லக் என்பார் ஒரு புதிய மெக்சிகக்குள்ள வகைக் கோதுமையை உருவாக்கினார். இது கோதுமைச் சிக்கலைத் தீர்க்கும் என்று உணர்ந்தார்.

8. அவர் பெற்ற விருதுகள் யாவை?

1. 1971இல் ரேமன் மேக்சேசே விருது பெற்றார். நாட்டில் வேளாண்மையில் ஒரு புது நம்பிக்கையை உருவாக்கியதற்காக இந்தப் பரிசு.
2. 1973இல் இலண்டன் அரசர் கழக உறுப்பினரானார்.
3. பத்நகர் விருது, பிர்பால் சாகினி பதக்கம், மெண்டல் நினைவுப் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
3. 1987இல் முதல் உலக உணவுப் பரிசு பெறுதல்.
4. 1994இல் சசகாவா சூழ்நிலைப் பரிசு (UNEP) பெற்றார்
5. 1996இல் நீலக்கோள் பரிசு பெற்றார்.
6. 1999 இந்திரா காந்தி அமைதிப் பரிசினைப் பெற்றார்.
7. 1999இல் உணவு - வேளாண்கழகப் பரிசு பெறல்.
8. 2001இல் புத்தாயிரம் விருதை இந்திய அறிவியல் பேரவையின் 88ஆவது அமர்வில் பெற்றார்.
9. 2001இல் லோகமானிய திலக் விருது பெறுதல்.

9. அவர் வகித்த பதவிகள் யாவை?

1. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர்.
2. பிலிப்பைன்சிலுள்ள அனைத்துலக நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர்.

10. அவர் பெற்ற தனிச் சிறப்பு யாது?

1986இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் உலக அறிவியல் விருது பெற்றார். இந்த விருதைப் பெற்ற முதல் வேளாண் அறிவியலார் இவரே ஆவார்.

11. அவர் தற்பொழுது வகிக்கும் பதவி என்ன?

சென்னைத் தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.

12. மரபணு வழியமைந்த உணவுகள் பற்றி அவர் கூறுவது என்ன?

இவை பற்றி மக்கள் அச்சங்கொள்ளத் தேவை இல்லை என்கிறார்.

13. தற்பொழுது எவை தேவை என அவர் வற்புறுத்துகிறார்?