பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110



உற்பத்தியும் தகுதி வாய்ந்த புரட்சியும் வேளாண்மையில் தேவை.

14. தற்கால வேளாண்மை அறிவு சார்ந்ததா உரம் சார்ந்ததா?

அறிவு சார்ந்தது. இதை உழவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

15. 10ஆம் ஐந்தாண்டுத் திட்டம் வற்புறுத்துவன என்ன?

1. தரிசுச் சாகுபடிக்கு முதன்மை அளித்தல்.
2. பள்ளத்தாக்கு வளர்ச்சி.
3. உணவு உற்பத்திப் பூங்காக்கள். இதில் வேளாண்தொழிலும் மருத்துவமனைகளும் அடங்கும்.

16. “2020 இல் இந்தியாவிற்கு உணவு வழங்குபவர் யார்?” என்னும் தலைப்பில் எங்குப் பேசினார்?

சலிம் நினைவுச் சொற்பொழிவை இத்தலைப்பில் ஆற்றினார்.

17. இதில் அவர் குறிப்பிட்டது என்ன?

அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் இந்தியாவும் சீனாவும் 40 மில்லியன் டன்கள் அளவுக்கு உணவுத் தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டிவரும். இச்சொற்பொழிவு 25-2-2002 அன்று நிகழ்த்தினார்.

18. இச்சொற்பொழிவில் அவர் கூறிய கருத்துகள் யாவை?

1. வேளாண்மை மட்டுமே வேலை வாய்ப்புள்ள பொருளியல் வளர்ச்சியை அளிக்கும்.
2. பசுமைப்புரட்சி என்பது ஒரு ஹெக்டேருக்கு உணவு உற்பத்தியைக் குறிக்கும்.
3. வேளாண்மையில் செங்குத்து வளர்ச்சியே இந் நூற்றாண்டில் இயலும். இதைக் கொண்டே நாம் உணவுத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
4. ஒருவர் சாகுபடி செய்யும் நிலமும் அதற்கு வேண்டிய. நீரும் கருங்கவே செய்யும்.
5. இச்சூழ்நிலையில் சூழ்நிலைத் தீங்கு இல்லாமல் இயன்ற வரை உற்பத்தியை உயர்த்துவதே அறிவுடைமை. இதுவே பசுமைப் புரட்சி விரும்புவதுமாகும்.

19. உலகம் தழுவியதாக்கல் பற்றி அவர் கூறுவது என்ன?