பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121


35. சடுதிமாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஜோசப் ஹெர்மன் முல்லர் 1946இல் பெற்றார்.

36. நொதிகளைப் படிகமாக்கலாம் என்னும் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1946இல் சமனர் ஜேம்ஸ் பேட்செல்லர், நார்த்ட்ராப், ஸ்டேன்லி ஆகிய மூவரும் 1946 இல் நோபல் பரிசு பெற்றனர்.

37. நடுமூளை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

வால்டர் ருடால்ப் ஹெஸ் 1949இல் பெற்றார்.

38. அட்ரினல் சுரப்பி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

பிலிப் ஷொவால்டர் ஹென்ச், ஈ.சி. கெண்டால், டி. ரிச்டெயின் ஆகிய மூவரும் 1950 இல் பெற்றனர்.

39. மஞ்சள் காய்ச்சலைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

மாக்ஸ் தெய்லர் 1951இல் பெற்றார்.

40. ஸ்டெப்டோமைசின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

செல்மன் அப்பிரகாம் நாக்ஸ்மன் 1952இல் பெற்றார்.

41. நாரத்தைக் காடிச் சுழற்சியைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

சர் ஹேன்ஸ் அடால்ஃப் கிரப்ஸ் 1953இல் பெற்றார்.

42. துணைநொதி Aஐக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

பிரிட்ஸ் ஆல்பர்ட் லிப்மன் 1953இல் பெற்றார்.

43. இளம்பிள்ளைவாத நச்சுயிர் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ், வெல்லர், இராபின்ஸ் ஆகிய மூவரும் 1954இல் பெற்றனர்.

44. உடல்பொருள் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?