பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122


டேனியல் போவட்1957இல் பெற்றார்.

45. மரபணுக்களின் குறிப்பிட்ட வேதிநிகழ்ச்சிகளை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1958இல் ஜார்ஜ் வெல்ஸ் பீடில், டெல்பர்க், டேடம் ஆகிய மூவரும் பெற்றனர்.

46. இன்சுலின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

பிரடரிக் சேங்கர், ஜூல்பர்ட் ஆகிய இருவரும் 1958இல் பெற்றனர்.

47. செயற்கைத் தடுப்பாற்றலைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சர் பிராங் மாக்பர்லேன் பர்னே, மெடவார் ஆகிய இருவரும் 1960இல் பெற்றனர்.

48. கரி தன்வயமாதலை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

மெல்வின் கால்வின் என்பார் 196இல் பெற்றார்.

49. காதுநத்தை எலும்புத்தூண்டுதல் பொறிநுட்பத்தை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஜார்ஜ் வான் பெர்க்சி 1961இல் பெற்றார்.

50. கோளவடிவப் புரத ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சர் ஜான் கெளடரி கெண்ட்ரு, பெருட்ஸ் ஆகிய இருவரும் 1962இல் பெற்றனர்.

51. டிஎன்ஏ மாதிரி அமைத்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

வாட்சன், கிரிக், பிரெடரிக் ஆகிய மூவரும் 1962இல் பெற்றனர்.

52. கண்ணறைப்படல ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ஆலன் லாய்டு ஹாட்கிளின், எக்கலாஸ், ஹியுரி ஆகிய மூவரும் 1963இல் பெற்றனர்.

53. நரம்பணுப்படல ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?