பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124


காக நோபல் பரிசுகள் பெற்றவர் யார்?

1970இல் ஜூலியஸ் ஆக்சல்ராடு, பர்னார்ட் காட்ஸ், உல்ப்வான் யூலர் ஆகிய மூவரும் நோபல் பரிசு பெற்றனர்.

63. வளர்தூண்டிகளின் பொறிநுட்பத்தை அறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

டாக்டர் சதர்லேண்டு 1971 இல் பெற்றார்.

64. ரிபோநியுகிளியேஸ் நொதி பற்றி ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1972இல் கிறிஸ்டியன் பி. ஆண்டின்சன், எஸ். மூர். எச். ஸ்டெயின் ஆகிய மூவரும் 1972 இல் பெற்றனர்.

65. எதிர்ப்புப் பொருள்களின் வேதியமைப்பு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

எம். ஜெரல்டு எடல்மன், ஆர்.ஆர். போர்டர் ஆகிய இருவரும் 1972 இல் பெற்றனர்.

66. உயிரணு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

கிறிஸ்டியன் டி டூவே, கிளாடி, பேலடு ஆகிய மூவரும் 1974இல் பெற்றனர்.

67. உயிரணு மரபுப் பொருள் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

டேவிட் பால்டிமோர், ஆர். டல்பெக்கோ, எச்.எம். டெமின் ஆகிய மூவரும் 1975 இல் பெற்றனர்.

68. தொற்றுநோய் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ஒ. கார்லெடன் காட்செக், பிளம்பர்க் ஆகிய இருவரும் 1976இல் பெற்றனர்.

69. மூளையின் பெப்டைடு தூண்டிக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசுபெற்றவர்கள் யார்?

வி ஆண்ட்ரூ ஷாலி, குய்லமின், ரோசலின் யாலோவ் ஆகிய மூவரும் 1977இல் பெற்றனர்.

70. வரம்புடைநொதி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

டேனியல் நாதன்ஸ், ஆர்பர், சிமித் ஆகிய மூவரும்