பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125


1978இல் பெற்றனர்.

71. உயிரியல் ஆற்றல் மாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

டி பீட்டர் மிட்செல் 1978இல் பெற்றார்.

72. உயிரணு மேற்பரப்பில் மரபணு வழியமைத்த அமைப்பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுகள் பெற்றவர்கள் யார்?

ஜீன் டாசட், ஜி.டி. ஸ்னெல், பி. பெனாசெரஃப் ஆகிய மூவரும் 1980இல் பெற்றனர்.

73. உட்கரு காடிகளை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1980இல் பால் பெர்ஜ், கில்பெர்ட், சேங்கர் ஆகிய மூவரும் பெற்றனர்.

74. புரோஸ்டாகிளாண்டின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

கயூன் கே. பெர்ஜஸ்டாம், சாமுவல்சன், வேன் ஆகிய மூவருக்கும் 1982 இல் கிடைத்தது.

75. இயங்கும் மரபணுக்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்ற பெண்மணி யார்?

பார்பாரா மெக்ளின்டாக் 1983இல் பெற்றார்.

76. தடுப்பாற்றல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

டாக்டர் கோநீல்ஸ் ஜெரின், கோலர், மில் ஸ்டெயினர் ஆகிய மூவரும் 1984இல் பெற்றனர்.

77. கொலாஸ்டிரால் வளர்சிதைமாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

மைக்கல் எஸ். பிரெளன், கோல்டுஸ்டாயின் ஆகிய இருவரும் 1985இல் பெற்றனர்.

78. வளர்ச்சிக் காரணிகள் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசுகள் பெற்றவர்கள் யார்?

ஸ்டேன்லிகோகன், ஆர். மோண்டல்சினி ஆகிய இருவரும் 1986இல் பெற்றனர்.