பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126


79. ஒளிச்சேர்க்கை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

இராபர்ட் ஹீயபர்ட் டெய்சன் ஹேபெர், எச். மைக்கல் ஆகிய மூவரும் 1988இல் பெற்றனர்.

80. பின்னிலை நச்சுயிரை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ஜே. மைக்கல் பிஷப், வார்மஸ், தாமஸ் செக் ஆகிய மூவரும் 1989இல் பெற்றனர்.

81. உயிரணுக்களில் தனி அயனிவழிகளின் வேலையைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

எர்வின் நெதர், சாக்மன் ஆகிய இருவரும்1991இல் பெற்றனர்.

82. மீன் திரும்புப் புரதப்பாசுவர ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

எச். எண்டமண்ட பிஷல், கிரப்ஸ் ஆகிய இருவரும் 1992இல் பெற்றனர்.

83. பாலிமரேஸ் தொடர்வினை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

பி. கேரி முல்லிஸ் 1993இல் பெற்றார்.

84. பிளவு மரபணுக்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

டாக்டர் ஜே.ரிச்சர்ட்ஸ், ஷார்ப் ஆகிய இருவரும் 1993இல் பெற்றனர்.

85. உயிரணுக்களின் குறிபாடுகள் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ஜி. ஆல்பிரட் கில்மன், ராட்பெல் ஆகிய இருவரும் 1994இல் பெற்றனர்.

86. தொடக்கக் கருவளர்ச்சி, மரபணுக்கட்டுப்பாடு ஆகியவை பற்றிப் புதிய உண்மைகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

எட்வர்டு லூயி, வோல்கார்டு, வீசக்ஸ் ஆகிய மூவரும் 1995 இல் பெற்றனர்.

87. உயிரணுவழி அமையும் தடுப்புப் பாதுகாப்பின் சிறப்