பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


2. தாவரத்தைப் பொறுத்தவரை இரு நிலைகள் யாவை?

1. உடல் நிலை: தாவரம் இலைகளையும் கிளைகளையுங் கொண்டிருத்தல்.

2. இனப் பெருக்க நிலை. பூச்களையும் கனிகளையும் உண்டாக்குதல்

3. தண்டு என்றால் என்ன?

தாவரத்தின் தரைக்கு மேல் வளரும் பகுதி. இதில் இலை, பூ, கணு முதலிய பகுதிகள் இருக்கும். ஈர்ப்புக்கு எதிராக வளர்வது.

4. தண்டின் வகைகள் யாவை?

1. தரைமேல்தண்டு - பூவரசு.
2. நலிந்த தண்டு - பிரண்டை
3. தரைகீழ்த்தண்டு - உருளைக்கிழங்கு.

5. தரைமேல் தண்டு மாற்றுருக்கள் என்றால் என்ன?

பாதுகாப்பு பற்றுதல் முதலிய சிறப்பு வேலைகளைச் செய்யத் தரைமேல் தண்டு உருவில் மாற்றமடைதல்.

6. தரைமேல் தண்டின் மாற்றுருக்கள் யாவை?

1. இலைத் தொழில் தண்டு - சப்பாத்தி.
2. இலைத் தொழில் காம்பு - பார்க்கின்சோனியா.
3. தண்டுப்பற்றுக் கம்பிகள் - பிரண்டை.
4. தண்டுமுள் - இலந்தை.

7. தரைகீழ்தண்டின் மாற்றுருக்கள் யாவை?

1. கிடைமட்டத்தண்டு - இஞ்சி.
2. குமிழ்க் கிழங்கு - சேனைக்கிழங்கு.
3. தண்டுக் கிழங்கு - உருளைக்கிழங்கு.
4. குமிழம் - வெங்காயம்.

8. பற்றுக்கம்பிகள் என்பவை யாவை?

மெல்லிய கம்பிச்சுருள் போன்ற தொடு உணர்ச்சியுள்ள தாவரப் பகுதிகள். வேலை: கொடிகள் பற்றிப் படர்ந்து செல்ல உதவுபவை.

9. இலைத்தண்டு என்றால் என்ன?

இது ஒரு வகை இலைத் தொழில் தண்டு. இதில் தட்டையான தண்டு இலையின் ஒளிச்சேர்க்கை