பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14


வேலையைச் செய்யும். இங்கு இலைகள் முட்களாகவோ செதில்களாகவோ மாறி இருக்கும். எ-டு. சப்பாத்தி.

10. இலைத் தொழில் தண்டு என்றால் என்ன?

தண்டின் கணுவிடை உருமாற்றம் பெற்று அகன்றிருக்கும். இலையாக வேலை செய்வது. எ-டு. சப்பாத்தி.

11. இலைத்தொழில்காம்பு என்றால் என்ன?

இலைக்காம்பு தட்டையாக இலைபோன்று அமைந்து இலையின் வேலையைச் செய்தல். எ-டு. அக்கேசியா சிறப்பினங்கள்.

12. கணுவிடை என்றால் என்ன?

தாவரத் தண்டில் இரண்டு கணுக்களுக்கிடையே உள்ள பகுதி.

13. கிடைத்தண்டு என்றால் என்ன?

தரைமேல் கிடக்கும் தண்டு. நெருஞ்சி.

14. கிழங்கு என்பது என்ன?

தண்டோ வேரோ கிழங்காக மாறுதல். தண்டு - இஞ்சி. வேர் - மரவள்ளிக்கிழங்கு.

15. மட்டக்கிழங்கு என்றால் என்ன?

இரு ஒரு தரைகீழ்த்தண்டு. எ-டு. இஞ்சி, மஞ்சள்.

16. கூவற்கிழங்கு என்றால் என்ன?

தூய ஸ்டார்ச் உள்ளது. எளிதில் செரிக்கக் கூடியது. கஞ்சியாக வைத்துக் குடிப்பதற்கேற்றது.

17. உண்ணக்கூடிய இரு தண்டுகள் யாவை?

வாழைத்தண்டு, கீரைத்தண்டு.

18. குருளை மரங்கள் என்பவை யாவை?

தொட்டியில் வளர்க்கப்படும் சிறிய செடிகள். இக்கலையில் ஜப்பானியர்கள் வல்லவர்கள்.

19. கூர்முள்கள் என்பவை யாவை?

நேராக இருந்து குத்தும் முள்கள். சப்பாத்தி முள்கள்.

20. முள் என்றால் என்ன?

இது தாவரக் கிளை முள்ளாகும். எ-டு. இலந்தை. பொதுவாக வளைந்து இருக்கும்.