பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


21. மரக்கட்டையின் வகைகள் யாவை?

1. சாற்றுக்கட்டை 2. வயிரக்கட்டை

22. வயிரக்கட்டை என்றால் என்ன?

நடுமரத்தின் கடினமான மையப்பகுதி. நீரைக் கடத்தாது. மரக்குழாய்களாலானது. கட்டைகறுப்பு நிறத்தில் இருக்கும்.

23. இளம் நிலக்கரி என்றால் என்ன?

தாவரப் பொருளிலிருந்து நிலக்கரி தோன்றுவதின் தொடக்க நிலை. இது ஒரு எரிபொருள்.

4. வேர்

1. தாவர உடலிலுள்ள இரு தொகுதிகள் யாவை?

1. தண்டுத் தொகுதி. 2. வேர்த்தொகுதி.

2. வேர்த்தொகுதியிலுள்ள பகுதிகள் யாவை?

ஆணி வேர், சல்லி வேர்கள், வேர்த்தூவி.

3. வேரின் இயல்புகள் யாவை?

1. ஈர்ப்பு நோக்கி இருட்டில் வளர்வது. தாவரத்திசுவிற்கு நிலைப்பு அளிப்பது.

2. ஊட்டநீரை உறிஞ்சித் தண்டுகளுக்கு அனுப்புவது.

3. மாற்றுரு பெறுவது.

4. வேர்த்தூவிகள் என்பவை யாவை?

வேரின் முடிவுறுப்புகள். மண்ணிலிருந்து ஊட்டநீரை உறிஞ்சி வேர்களுக்கு அளிப்பவை.

5. வேர் மாற்றுரு என்றால் என்ன?

இயல்பான வேலைகளைத் தவிரச் சேமிப்பு முதலிய சிறப்பு வேலைகளைச் செய்ய வேர் தன் உருவில் மாற்றமடைதல். இதில் ஆணி வேரும் வேற்றிட வேரும் தம் உருவில் மாற்றம் அடைகின்றன.

6. இதன் முதன்மையான இரு வகைகள் யாவை?

1. ஆணிவேர் மாற்றுருக்கள் - கேரட்

2. வேற்றிட வேர் மாற்றுருக்கள் - தண்ணீர் விட்டான் கிழங்கு.