பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20


3. சிறப்பிலைகள் - வெங்காயம்.


20. சிறகுக் கூட்டிலையின் வகைகள் யாவை?

1. ஒற்றைச் சிறகுக் கூட்டிலை - ஆவாரை.

2. இரட்டைச் சிறகுக் கூட்டிலை - கருவேல்.

3. முச்சிறகுக் கூட்டிலை - முருங்கை.


21. மீக்கூட்டிலை என்றால் என்ன?

இது மும்மடங்குச் சிறகுக் கூட்டிலை முருங்கைஇலை.


22. இலையமைவு என்றால் என்ன?

தண்டில் இலைகள் அமைந்திருக்கும் முறை.


23. இதன் வகைகள் யாவை?

1. ஓரிலை அமைவு - பூவரசு.

2. எதிரமைவு - அரளி.

3. வட்ட அமைவு - தங்க அரளி.

4. வேர்வரு அமைவு - முள்ளங்கி.

5. குறுக்குமறுக்கு அமைவு - எருக்கு.


24. இதன் பயன்கள் யாவை?

1. போதிய கதிரவன் ஒளி கிடைத்தல்.

2. இலைகள் ஒன்றின்மீது மற்றொன்று படாது இருத்தல்.

3. நிழல் விழாமல் இருத்தல்.


25. இலை விரிகுடை என்றால் என்ன?

ஒரு தாவரத்தின் மொத்த இலைத் தொகுதிப் பரவல். மரத்தின் இலைத் தொகுதி விரிந்த குடைபோல் இருக்கும்.


26. இலைச் சுருளல் என்றால் என்ன?

இது தாவர நோய்.


27. இலை ஏன் உதிர்கிறது?

தாவர இலைக் காம்படியில் பிரிமண்டலம் உண்டாவதால் இலை உதிர்கிறது.


28. நுண் சிதல் இலை என்றால் என்ன?

மாற்றுரு பெற்ற இலை. இது உறையில் விதையில்லாத் தாவரங்களின் ஆண் கூம்புகளிலும் லைக்கோபாடுகளின் செழிப்பான ஒளிச்சேர்க்கை இலைகளிலும் காணப்படுவது. இது ஒரு சதிலே.