பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


இலைத் தொகுதியான பொது இலைகள்.


39. வேற்றிட அரும்புகள் என்றால் என்ன?

முளை இலைத் தாவரங்களில் இவை விளிம்பில் தோன்றும். எ-டு. பிரையோபைலம் (கட்டிப்போட்டால் குட்டி போடு இலை). ஒவ்வொரு அரும்பும் ஒரு புதிய தாவரம் ஆகும். தோன்றும் இடம் வேறுபடுவதால் இப் பெயர்.


40. காப்பணு என்றால் என்ன?

இலைத் துளையின் பக்கத்திலுள்ள அவரை விதை வடிவமுள்ள புறத்தோல் அணு. ஒவ்வொரு இலைத் துளையிலும் இரு காப்பணுக்கள் உண்டு. இவை இலைத்துளை மூடித் திறப்பதைக் கட்டுப்படுத்துபவை.


41. இலைத்துளை என்றால் என்ன?

தாவரப் புறத் தோலில் காணப்படும் நுண்ணிய துளை. இது மூச்சுவிடப் பயன்படுகிறது.


42. பூசைக்குப் பயன்படும் இலைகள் யாவை?

துளசி இலை, வில்வ இலை.


43. தலையில் அணிந்து கொள்ளும் நறுமண இலை எது?

மருக்கொழுந்து.


44. கறியாகப் பயன்படும் இரு இலைகளைக் கூறுக.

முளைக்கீரை, முட்டைக்கோஸ்.


6. பூ

1. பூ வட்டங்கள்


1. பூத்தாவர வளர்ப்பு என்றால் என்ன?

பூக்குந் தாவரங்களை வளர்க்கும் கலை, எ-டு. ரோஜா வளர்த்தல்.


2.பூ என்றால் என்ன?

தாவரத்தின் உருமாறிய தண்டும் இலையுமாகும். இனப் பெருக்க உறுப்பு.


3.பூப்பகுதி அமைவு என்றால் என்ன?