பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


54. மேற்சூல்பைப்பூ என்றால் என்ன?

புல்லிகள், அல்லிகள், மகரந்தத்தாள் ஆகியவற்றிற்கு மேலுள்ள சூல்பை. இதற்கு மேலுள்ள பூ மேற்சூல்பைப்பூ ஆகும். எ-டு. வெங்காயம்.


2. பூக்கொத்து

55. பூக்கொத்து என்றால் என்ன?

தனியாகவோ கொத்தாகவோ தண்டில் பூ அமைந்திருக்கும் முறை.

56. இதன் வகைகள் யாவை?

1. நெடுங்கொத்து - முடிவில்லாப் பூக்கொத்து. எ-டு. கடுகு, அவரை.

2. குறுங்கொத்து - முடிவுள்ள கொத்து. எ-டு. மல்லிகை.

3. மீங்கொத்து - தனியமைப்புள்ளது. எ-டு. அத்தி.

57. தலைப்பூக்கொத்து என்றால் என்ன?

சூரியகாந்திப் பூவின் கொத்து.

58. பொதிகை என்றால் என்ன?

1. ஒரு பிளவுறு கனி - வெண்டை

2. குச்சி வடிவ உயிரியில் கண்ணறைப் படலத்தைச் சுற்றியுள்ள படலம்.

3. மாசியின் கருப்பயிர்த் தலைமுறையில் காணப்படும் பகுதி.

4. ஓர் உறுப்பு அல்லது பகுதியில் சூழ்ந்துள்ள பாதுகாப்புறை.

59. கதிர்க்கொத்து என்றால் என்ன?

கதிர்ப்பூக்கொத்து. ஒருபால் பூக்கள் குஞ்சம் போல் இருக்கும். பூவடிச் செதில்களாகப் பூக்கள் குறைந் திருக்கும். எ-டு. மஞ்சள் மலர்ச்செடி (வில்லோ)

60. ஊசல் பூக்கொத்து என்றால் என்ன?

பல காம்பற்ற பூக்கள் இதிலிருக்கும். இவை வழக்கமாக