பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31



7. கனி


1. கனி என்றால் என்ன?

கருவுற்றுப் பழுத்த சூல்பையே கனி.


2. காய் என்றால் என்ன?

கருவுற்று முதிர்ந்த சூல்பையே காய்.


3. கருவுறாக்கனி என்றால் என்ன?

கருவுறாமல் முதிர்ச்சி அடையுமானால் அக்கனி கருவுறாக்கனி, எ-டு. வாழை, கொய்யா.


4. கனியின் வகைகள் யாவை?

1. தனிக்கனி - மா

2. திரள்கனி - சீதாப்பழம்.

3. கூட்டுக்கனி - பலாப்பழம்.


5. தனிக்கனி என்றால் என்ன?

ஒரு சூல்பையிலிருந்து உண்டாகும் கனி, மா.


6. தனிக்கனியின் வகைகள் யாவை?

1. சதைக்கனி - ஆப்பிள்.

2. உலர்கனி - தென்னை நெற்று.


7. சதைக்கனியின் வகைகள் யாவை?

1. சாற்றுக் கனி - திராட்சை

2. ஒட்டுக்கனி - மா.

3. பூத்திரள் கனி - ஆப்பிள்.

4. கொப்பூழ்க்கனி - பறங்கி.

5. நாரத்தை வகைக்கனி - எலுமிச்சை.


8. உலர்கனி வகைகள் யாவை?

1. வெடிகனி, 2. வெடியாக் கனி.


9. வெடிகனியின் வகைகள் யாவை?

1. பருப்புக்கனி - உளுந்து.

2. ஒருபுற வெடிகனி - எருக்கு.

3. குறுக்குமுறிகனி - கருவேல்.

4. அறைவெடி பொதிகை - வெண்டை

5. தடுப்பு வெடி பொதிகை - ஆடுதீண்டாப்பாளை.

6. கவர்பிரிபொதிகை - ஊமத்தை.