பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33


17. ஒட்டுக்கனி என்றால் என்ன?

மேலுறை, நடுவுறை, உள்ளுறை என மூன்று பகுதிகளைக் கொண்ட கனி, மா.

18. இதில் உண்ணக்கூடிய பகுதி எது?

நடுவுறையான சதைப்பகுதி.

19. சொறிக்கனிகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

பலாப்பழம், அன்னாசிப்பழம், நுணாப்பழம்.

20. பலாப்பழத்தின் பல பகுதிகள் யாவை?

அதன் மைய அச்சு பூக்காம்பு, உண்ணும் சுளைகள் இதழ்வட்டங்கள். களையிலுள்ள கொட்டையே உண்மைக்கனி. கொட்டையுள்ளவையே கனியுறை. பலாச் சக்கை என்பது மலட்டுப் பூக்கள் ஆகும். முட்களுள்ள தோல், புற உறை ஆகும்.

21. தேங்காய் என்பது என்ன? அதன் முக்கிய வேலை என்ன?

தேங்காய் என்பது முளை சூழ்தசையாகும். இது தென்னம்பிள்ளையின் குருத்தும் வேரும் வளர ஊட்டம் அளிப்பது. இதன் புறவுறை அகணி, நடுவுறை நார். உள்ளுறை கொட்டாங்கச்சி.

22. கொட்டை என்பது என்ன?

ஒரு வகை உண்மைக்கனி, ஒரு விதை மட்டும் உள்ளது. எ-டு மாங்கொட்டை, முந்திரிக்கொட்டை

23. செவ்வறைக்கனி (அக்கீன்) என்றால் என்ன?

ஒரு சூல் இலைச் சூல்பையிலிருந்து உண்டாகும் ஒற்றை விதைக்கனி, நெல்.

24. கருவுறாக்கனி என்றால் என்ன?

கருவுறாமல் உண்டாகுங்கனி, எ-டு வாழை, அன்னாசி.

25. கருவுறா இனப்பெருக்கம் என்றால் என்ன?

கருவுறா முட்டை ஒர் உயிராக வளர்தல்.

26. கனிகள் எளிதாகப் பரவ உள்ள அமைப்புகள் யாவை?

1. நாயுருவி - முட்கள்

2. எருக்கு - குஞ்சம்

3. விதைகள் இலேசாக இருத்தல்.

27. கனிகள் பரவக் காரணமென்ன?

3