பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54



28. பூப்பனவற்றின் வகைகள் யாவை?

1. உறையில் விதையுள்ளவை - பூவரசு.
2. உறையில் விதையில்லாதவை - சளம்பனை.
3. இரு விதையிலைத் தாவரங்கள் - பூவரசு.
4. ஒரு விதையிலைத் தாவரங்கள் - தென்னை.

29. பூவாதனவற்றின் வகைகள் யாவை?

1. தண்டுடையன - பாசிகள், பூஞ்சைகள்.
2. மாசித் தாவரங்கள் - மாசிகள்.
3. பெரணித் தாவரங்கள் - பெரணிகள்.

30. பூக்குந் தாவரங்கள் யாவை?

தாவர உலகின் பெரும்பிரிவு. இதில் உறையில் விதையுள்ள தாவரங்கள் (மா) உறையில் விதையில்லாத் தாவரங்கள் அடங்கும்.

31. விதைத் தாவரங்கள் என்பவை யாவை?

உறையிலோ உறையில்லாமலோ விதைகளை வெளிப்படுத்தும் தாவரங்கள்.
முன்னவை விதையுறைத் தாவரங்கள் - தென்னை.
பின்னவை விதையுறையிலாத் தாவரங்கள் - சளம்பனை.

32. உறையில்விதையில் தாவரங்கள் என்றால் என்ன?

பூக்குந் தாவரங்கள். விதைகள் உறையில் இல்லாதவை. எ-டு. ஈச்சை போன்ற சளம்பனை.

33. புவித்தாவரம் என்றால் என்ன?

தரைக்குக் கீழுள்ள அரும்புகள் மூலம் மேல் வளரும் தாவரம். இவ்வரும்புகள் தண்டுக்கிழங்கு, குமிழம், குமிழ்க்கிழங்கு, வெங்காயம்.

34. தாவரப் பருவக்காலத்தின்படி அதை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

1. ஒருபருவப்பயிர்கள் - நெல்.
2. இருபருவப் பயிர்கள் - முள்ளங்கி
3. பலபருவப் பயிர்கள் - கத்தாழை.
4. பல்லாண்டுத் தாவரங்கள் - தாளிப்பனை.

35. ஒரு பருவத்தாவரம் என்றால் என்ன?

தன் வாழ்க்கைச் சுற்றை ஓராண்டில் நிறைவு செய்யும்