61
7. அந்தரேசி குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறியலாம்?
1. இலைகள் இலையடிச் செதில்கள் அற்றவை.
2. சிரமஞ்சரி அல்லது தலைப்பூக்கொத்து.
3. புல்லிவட்டம் மயிர்க்குஞ்சமாக இருக்கும்.
4. மகரந்தப்பைகள் இணைந்தவை.
8. அரிக்கேசி குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறியலாம்?
1. உயரமான பல பருவச் சிறுசெடிகள் அல்லது கட்டைத் தன்மையுள்ள மரங்கள்.
2. சுழல்அமைப்பில் இருவரிசையில் இலைகள் அமைந்திருக்கும். தனிஇலைகள்.
3. கீழ்மட்டச் சூல்பை.
9. மூசேசி குடும்பத்தை எவ்வாறு இனங்கண்டறியலாம்?
1. உயரமான பல பருவச் சிறு செடிகள் அல்லது கட்டைத் தன்மையுள்ள மரங்கள்.
2. சுழலமைப்பில் இரு வரிசைகளில் கிளைகள் அமைந்திருக்கும். தனி இலைகள்.
3. கீழ்மட்டச் சூல் பை.
10. ஒரு தாவரத்தை வகைப்படுத்திக் காட்டுக.
உலகம் - தாவர உலகம்
பிரிவு - விதைத் தாவரங்கள்
வகுப்பு - இருவிதையிலைத் தாவரம்
குடும்பம் - மால்வேசி
பேரினம் - அய்பிஸ்கஸ்
சிறப்பினம் - ரோசாசைனன்சிஸ்
முழுப்பெயர் - அய்பிஸ்கஸ் ரோசாசைனன்சிஸ் - செம்பருத்தி.
11. பெந்தம் - ஹூக்கர் வகைப்பாட்டில் அடங்கியுள்ள குடும்பங்கள், பேரினங்கள் சிறப்பினங்கள் யாவை?
குடும்பங்கள் 200 பேரினங்கள் 73569. சிறப்பினங்கள் 97,145.