பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73


கருவணுவில் மீண்டும் 23 இணைநிறப்புரிகள் உண்டாகும்.

24. இருநிலை வடிவி என்றால் என்ன?

கண்ணறைப் பிரிவின் பொழுது தோன்றும் உரு. இது விண்மீன் போன்ற இருவடிவங்களாலானது. கதிரினால் இணைக்கப்பட்டிருப்பது.

25. ஈரிணைநிலை என்றால் என்ன?

குன்றல் பிரிவில் ஒரு நிலை. இதில் சுருள் இழைகள் இரண்டிரண்டாக அமையும்.

26. அல்கணிகம் என்றால் என்ன?

கண்ணறைச் சுவர், கண்ணறை இடைப்பொருள் ஆகியவை தாவரம் முழுதும் தொடர்ச்சியாக இருத்தல். குழாய்த்திசுவில்லாத தாவரங்களில் நீர் இயக்கம் இதன் வழியாகவே நடைபெறுகிறது.

27. விண்மீன் வடிவி என்றால் என்ன?

1. கண்ணறைப் பிரிவில் தோன்றும் உரு. மையப் புரிகளைச் சூழ்ந்துள்ள கதிர்கள் விண்மீன் வடிவத்தில் இருப்பவை.

2. தும்பைக் குடும்பத்தின் தொகையைக் குறிக்கும்.

28. செயற்கைப் பண்பு என்றால் என்ன?

தாவர இயற்கைத் தொடர்புகளைக் கருதாது, ஒருசார் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பண்பு.

29. மூலக்கணியம் என்றால் என்ன?

விண்மீன் வடிவிகளையும் கதிர்களையும் உண்டாக்கும் தனிச்சிறப்புள்ள பொருள். இது கண்ணறைப் பிரிவில் உண்டாவது.

30. கருமூலக்கண்ணறை என்றால் என்ன?

பாலணுக்களை உண்டாக்கும் உயிரணுக்கள்.

31. செல்லுலோஸ் என்றால் என்ன?

பன்மச் சர்க்கரைடு. எல்லாத் தாவரக் கண்ணறைச் சுவர்களின் சட்டகம்.

32. முழுஆக்குதிறன் (totipotency) என்றால் என்ன?

பல உயிரணுக்கள் முதிர்ந்த உயிரியை உண்டாக்கும் எல்லா வகைத் திக்ககளையும் தோற்றுவிக்குந் திறன்.