பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75


2. தாவர உடலுக்குத் தாங்குதல் அளித்தல்.

41. பட்டைத்திசுவின் வேலை என்ன?

ஊட்டப்பொருள்களைக் கடத்தல்.

42. மையத்திசு என்றால் என்ன?

தாவரத்தண்டு அல்லது வேரிலுள்ள உருளைத்திசு. உட்தோல், சுற்றுவட்டம் ஆகியவற்றைக் கொண்டது.

43. வளர்திசு என்றால் என்ன?

ஆக்கத்திசு. இதிலுள்ள அணுக்கள் பிரிந்து, வளர்ச்சியை உண்டாக்குபவை. இது உயரினத் தாவரங்களிலும் தண்டுமுனையிலும் வேர்முனையிலும் காணப்படுவது.

44. இதன் வகைகள் யாவை?

1. நுனி வளர்திசு. 2. இடைபொருந்து வளர்திசு. 3. பக்க வளர்திசு.

45. நடுத்திசுவிலுள்ள மூவகைத்திசுக்கள் யாவை?

1. வேலிக்கால்திசு. 2. பஞ்சத்திசு, 3. வளரியம். நடுத்திசு இலையில் உள்ளது. பசுங்கணிகங்கள் இருப்பதால் ஒளிச்சேர்க்கை நடைபெறும்.

46. காற்றுப் பஞ்சுத்திசு என்றால் என்ன?

நீர்த்தாவரங்களில் காணப்படும் மூச்சுத்திசு.

47. வளையத்திசு என்றால் என்ன?

1. பெசிடியோமைசிட் பூஞ்சையின் முதிர்ந்த வித்துறுப்பின் காம்பைச் சுற்றியுள்ள வளையத்தாலான திசு.

2. பெரணிச்சிதலகத்தில் காணப்படும் தனி வில் வளையம். இதுவே சிதல்கள் பரவக் காரணம்.

3. பியுனேரியா முதலிய மாசிகளில் செவுள் மூடியிலிருந்து புறத்தோலைப் பிரிக்கும் கண்ணறை வளையம்.

48. செவிலித்திசு என்றால் என்ன?

வளரும் பாலணுக்களுடன் தொடர்பு கொண்டு அதற்கு ஊட்டமளிக்கும் திசு.

49. உரத்திசு என்றால் என்ன?

தாவரத்திசுவில் ஒருவகை. உரம் அளிப்பது.

50. இரண்டாம் நிலை வளர்ச்சி என்றால் என்ன?

பக்க வளர்திசுக்களிலிருந்து உண்டாகும் வளர்ச்சி.