பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93



1871இல் வெளியிட்டார்.

9. வாலேஸ் விளைவு என்றால் என்ன?

இயற்கை இயலார் வாலேஸ் முன்மொழிந்த கருத்து. ஒரு சிறப்பினத்திற்குள் இனப்பெருக்கத் தடைகள் வளர்ந்து, பின் அவை தேர்வினால் மேம்பாடு அடைதல் என்பது இதன கருத்து.

10. வாலேஸ்கோடு என்றால் என்ன?

இந்தோனேசியாவில் பாலிதீவுகளுக்கும் லாம்போக் தீவுகளுக்கும் இடையிலுள்ள கற்பனை எல்லை. ஆஸ்திரேலியத் திணை விலங்குகளையும் கீழ்த்திசைத் திணை விலங்குகளையும் பிரிப்பது. தார்வின் தம் உயிர்மலர்ச்சிக் கொள்கையை உருவாக்கியதில் வாலேஸ் (1823-1913) என்பவர் வரைந்தது.

11. ஊக்கணுவாக்கம் என்றால் என்ன?

சார்லஸ் தார்வின் முன்மொழிந்த கொள்கை, ஊக்குவிக்கும் அணுக்கள் எல்லா உடல் உறுப்புகளிலிருந்தும் உடல் நீர்மங்களில் கலந்து, இனப்பெருக்க அணுக்களுக்குச் செல்கின்றன. இவை பாலணுக்களை ஊக்கு விக்க, அவை மீண்டும் அடுத்த தலைமுறைக்குரிய பண்புகளை ஊக்குவிக்கின்றன.

12. ஒருபோக்கு உயிர்மலர்ச்சி என்றால் என்ன?

ஒரே திசையில் நடைபெறும் வலுவான இயற்கைத் தேர்வினால் நெருங்கிய உறவுடைய உயிர்களுக்கிடையே ஒத்த இயல்புகள் உருவாதல். எ-டு. நீர் காக்கைக்கால், ஆற்றுக்காக்கைக்கால் ஆகிய இரு தாவரத்திலும் பிரிந்ததும் நீரில் முழ்கியதுமான இலைகள் உண்டாதல்.

13. புதுத்தார்வின் கொள்கை என்றால் என்ன?

இயற்கைத் தேர்வு வழியமைந்த உயிர்மலர்ச்சி குறித்த தார்வின் கொள்கை, மெண்டல் ஆராய்ச்சியின் விளைவாக எழுந்த உண்மைகளால் திருத்தியமைக்கப்பட்ட கொள்கை.

14. புது லெமார்க்கியம் என்றால் என்ன?

உயிர்மலர்ச்சி பற்றி மாற்றங்கள் பெற்ற லெமார்க்கு