பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97



ஒரே மரபணு அமைப்பை உடைய வகை. இனமாதிரி என்று அறுதியிடப்பட்டது. இதில் தொடர்புடைய வகைகள் தொகைப்படுத்தப்பட்டிருக்கும்.

43. சமுதாய மரபணு வங்கி என்றால் என்ன?

இது சென்னைத் தரமணி அரசு வளாகத்திலுள்ள சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. உயிர் வேற்றுமைகளைப் பாதுகாக்க இது மிக இன்றியமையாதது.

44. பகுப்பு நொதி என்பது யாது?

குச்சிவடிவ உயிருக்கு எதிர்ப்பான நொதி. உடல் நீர்மங்கள், சுரப்புகள் (கண்ணீர், உமிழ்நீர்) ஆகியவற்றில் உள்ளன. குச்சிவடிவ உயிர்களை அழிப்பவை.

45. பகுப்புப்புரி (லைசோகோம்} என்றால் என்ன?

தாவர மற்றும் விலங்குக் கண்ணறைகளில் ஓர் உறுப்பு. சிதைக்கும் பண்புடைய பல நொதிகளைக் கொண்டது.

46. பகுப்புப்புரியின் வேலைகள் யாவை?

1. உணவுக் குமிழிகளுக்கு நொதிகளை வழங்கல்.
2. உருவளர்ச்சியின் பொழுது கண்ணறைகளையும் திசுக்களையும் அழிப்பதில் ஈடுபடுவது.

47. ஒருமம் என்றால் என்ன?

பாலணுக்களில் உள்ளது போன்று ஒரு தொகுதி (ஒற்றைப்படை நிறப்புரிகளைக் கொண்டது. இது ஆண், பெண் அணுக்களுக்குரியது.

48. ஒருமத் தாவரம் என்றால் என்ன?

உயிரணுக்களில் நிறப்புரி ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள சிதல் பயிர் (ஸ்போரோபைட்)

49. இருமம் என்றால் என்ன?

ஓர் உயிரி இரட்டைப்படையில் நிறப்புரிகளைக் கொண்டிருத்தல். இது உடல் கண்ணறைகளுக்குரியது.

50. இருமத்தாவரம் என்றால் என்ன?

நிறப்புரிகளை உடல் கண்ணறைகளில் இரட்டைப்படை எண்ணில் கொண்டிருக்கும் தாவரம்.

51. அல்மயம் என்றால் என்ன?