பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. 15. 17 14 பில்லியன் ஆண்டுகள் புவியின் வடிவம் என்ன? பேரிக்காய் வடிவத்தில் உள்ளது. புவியின் வடிவத்தை முதன்முதலில் நேராகக் கண்டது யார்? யூரி ககாரின் முதல் உருசிய வானவெளி வீரர். நீள்வட்டம் என்றால் என்ன? புவி தன் அச்சில் சுற்றுகின்ற விரைவு அதை நிலநடுக் கோட்டில் உப்பச் செய்கிறது; முனைகளில் தட்டையாக் குகிறது. இவ்வடிவம் நீள்வட்டம் ஆகும். உயிர்க்கோளம் I என்றால் என்ன? இது இயற்கைப்புவி ஆகும். உயிர்க்கோளம் ll என்றால் என்ன? உயிர்க்கோளம்' க்கு ஒப்பான செயற்கைக்கோளம். இது ஒரு திட்டமாக 1992இல் தொடங்கி 1994இல் முடிந்தது. புவிச் சாவடிகளைப் பிற கோள்களில் எதிர்காலத்தில் அமைப்பது இதன் முதன்மையான நோக்கம். நீர், காற்று, ஊட்டங்கள் ஆகியவற்றின் மீள் சுழற்சியால் புவி எவ்வாறு தன்னைத் தானே தாங்கிக் கொள்கிறது என்பதை அறிந்தது இரண்டாவது கோளம் தோடு என்றால் என்ன? நிலவுலகின் கெட்டியான வெளிப்பகுதி. உயிர் வாழத் தகுதியுள்ளது. புவித் தோட்டின் தடிமன் என்ன? கண்டங்களுக்கீழ் 30 -40 கி.மி. கடலுக்குக் கீழ் அதன் தடிமன் 6-8 கி.மீ. புவியின் காந்தப் புலங்கள் எவ்வளவு தொலைவு பரவி யுள்ளன? வான வெளியில் பல ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு உள்ளன. புவியின் மற்றொரு பக்கத்திற்கு நாம் குகை அமைக்க முடியுமா? முடியாது. புவியின் அக உள்ளகம் மித வெப்பமாக உள்ளது. H・?」。