பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. 30 கற்கால மனித வகை எச்சங்கள் என உறுதி செய்யப் பட்டுள்ளன. பில்ட்டவுன் மனிதன் யார்? 1912இல் பிட்டவுன் என்னுமிடத்தில் சார்லஸ் த்ாசானி கண்டுபிடித்த தொல்படிவ எச்சங்கள். ஈயோந்திராபஸ் தாசானி என இதற்கு அவர் பெயரிட்டார். 5. புவி இயற்பியல் புவி இயற்பியல் என்றால் என்ன? புவி அமைப்பியலின் ஒரு பிரிவே புவி இயற்பியல். இது ஒரு பயன்படு அறிவியல். இயற்பியலின் நெறிமுறை களையும் நுணுக்கங்களையும் கொண்டு புவியையும் அதன் சூழ்நிலையையும் ஆராயப் பயன்படுவது. இதன் நோக்கு என்ன? திண்மநிலையிலுள்ள புவி, கடல்கள், காற்றுவெளி, காந்தப் புலங்கள், துகள்கள், கோளங்கள், கதிரவனுக்கும் கோள்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஆகியவற்றை விளக்குவது. புவி இயற்பியல் கனிவளத்தேட்டம் என்றால் என்ன? புவி இயற்பியல் முறைகளைக் கொண்டு கனிவளங் காணல். புவி வடிவ இயல் என்றால் என்ன? புவி உருவியல். புவிமேற் பரப்பைப் படமாக்குதல், அளவை செய்தல் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. இதனால் அதன் வடிவம், அளவு, ஈர்ப்புப்புலம் ஆகியவற்றை உறுதி செய்ய இயலும். புவித் தொழில் நுட்ப இயல் என்றால் என்ன? கட்டுமானப்பணிகளுக்காக மண் பண்புகளை ஆராயுந் துறை. கதிரவன் குடும்பம் என்றால் என்ன? கோள்களையும் அவற்றின் திங்கள்களையும் கொண்ட தொகுதி.