இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
99
43. இறப்பு வீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
- 1000த்தை நிலை எண்ணாகக் கொண்டு பிறப்பு இறப்பு அடிப்படையில் கணக்கிடப்படுவது.
44. ஆண்டு இறப்பு வீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
- பதிவு செய்யப்பட்ட இறப்புகள் x 1000
- அந்த ஆண்டு நடுப்பகுதி மக்கள் தொகை
45. குழந்தை இறப்பு வீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
- ஒராண்டில் குழந்தை இறப்புகள் X 1000
- பதிவு செய்யப்பட்ட பிறப்புகள்
46. தாய் இறப்பு வீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
- கருவுற்று இறக்கும் பெண்கள் X1000
- பதிவு செய்யப்பட்ட உயிருள்ள உயிரற்ற பிறப்புகள்.
47. பேற்றுத் துணை இயல் என்றால் என்ன?
- பிள்ளைப்பேற்று நடவடிக்கைகளை ஆராயும் மருத்துவப் பிரிவு. இதைக் கவனிப்பவர் பேற்றுத் துணைவி அல்லது மருத்துவச்சி.
48. செவிலியர் படிப்பு என்றால் என்ன?
- நோயாளிகளையும் காயமுற்றோரையும் கவனிப்பதில் பயிற்சியளித்தல். பெண்களே இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். செவிலியர் இல்லாத மருத்துவமனை இல்லை.
16. மக்கள் நல்வாழ்வு
1. பொது நல்வாழ்வு, தனி நல்வாழ்வு என்றால் என்ன?
- குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கழிப்பிட வசதி, ஊசி போடுதல் முதலியவற்றிற்கு அரசு ஏற்பாடு செய்து, இவற்றை மேம்படச் செய்கிறது. இவ்விரு துறைகளும் ஒன்றுடன் மற்றொன்று பின்னிப் பிணைந்தவை.
2. நல்வாழ்வு இயற்பியல் என்றால் என்ன?
- அணு இயற்பியல் தொடர்பாக ஏற்படும் தீங்குகளிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் மருத்துவ இயல் பிரிவு.