பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


3. நல்வாழ்வு என்பது என்ன?

நல்வாழ்வு பேணுவது பற்றி ஆராயுந் துறை

4. இதன் வகைகள் யாவை?

சமுதாய நல்வாழ்வு, தொழிற்சாலை நல்வாழ்வு, உள நல்வாழ்வு, தனி நல்வாழ்வு எனப் பலவகை.

5. நன்னிலை இயல் என்றால் என்ன?

வாழ்நிலைகளை மேம்படுத்துவதை ஆராயுந்துறை.

6. நல்லியல் என்றால் என்ன?

மனிதனின் மரபுப் பண்புகளை மேம்படுத்துவதை ஆராயுந்துறை.

7. ஊட்டம் பெறல் என்றால் என்ன?

உயிரிகள் தாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பொருள்களிலிருந்து அவற்றைப் பெறும் முறை. வளர்வதற்கும் பழுது பார்ப்பதற்கும் இவ்வாற்றலைப் பயன்படுத்துகின்றன. பெறும் ஊட்டம் நிறைவு ஊட்டமாக இருத்தல் நலம். உடல் நலத்திற்கு நல்ல ஊட்டம் தேவை. இது 3000 கலோரி வெப்பத்தைத் தரக் கூடியதாக இருக்க வேண்டும். இதில் போதிய வைட்டமின்களும் இருக்க வேண்டும்.

8. தடுப்பாற்றல் என்றால் என்ன?

நோய், நச்சு முதலிய தீய விளைவுகளுக்குத் தாக்குப் பிடிக்கும் ஒர் உயிரியின் திறன்.

9. ஆவைன் (வேக்சைன்) என்றால் என்ன?

நுண்ணுயிர்களைக் கொண்ட நீர். குதிரை, பசு முதலிய பாலூட்டிகளில் செலுத்தப்படும் பொழுது நோய்க்கு எதிர்ப்புப் பொருளை உண்டாக்குவது.

10. ஆவைனைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?

1959 இல் ஜோன்ஸ் சால்க் என்பார் கண்டறிந்தார். இது சால்க் ஆவைன் எனப் பெயர் பெறும். இது ஊசி மூலம் செலுத்தப்படும் போலியோ தடுப்பு மருந்து.

11. சால்க் ஆவைன் என்றால் என்ன?

இளம்பிள்ளை வாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட முதல் மருந்து. ஊசி மூலம் செலுத்தப்படுவது.