பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


37.ஒட்டுண்ணி என்றால் என்ன?

ஒம்புயிரை அண்டி வாழும் நோய் உயிரி. பிளாஸ்மோடியம் மலேரியா நோயை உண்டாக்குவது. இது அனோபிலஸ் கொசு வழியாக நம் உடலை அடைகிறது. மலேரியாவை உண்டாக்குவது. இதில் பிளாஸ்மோடியம் நன்மை பெறுவது, தீமை பெறுவது, நோயினால் துன்பப்படுவது நாம்.


38.ஊசிபோடல் என்றால் என்ன?

ஊசி மூலம் மருந்தை உடலில் செலுத்தல். குருதியில் நேரடியாகக் கலப்பதால் விரைந்த பயனுண்டு. தசையிலும் குருதிக் குழாயிலும் ஊசி போடலாம்.


39.தடுப்பூசி போடல் என்றால் என்ன?

தடுப்பு மருந்தை உடலினுள் செலுத்துதல், காலரா ஊசி.


40.புரைய எதிர்ப்பிகள் யாவை?

அயோடின் கரைசல், டெட்டால், பிக்ரிகக் காடி.


41.நலப்பேணகம் என்றால் என்ன?

நோயாளிகள் மீண்டும் தங்கள் உடல் நலத்தைப் பெற உதவும் நிலையம். என்புருக்கி நலப் பேணகம்.


42.துப்புரவு என்றால் என்ன?

மக்கள் நல்வாழ்வுக்கு உதவும் முறைகளில் பயன்படுத்தல். நல்ல குடிநீர், கழிவிட வசதி முதலியவை.


43. மருத்துவ உதவியாளர் என்பவர் யார்?

மருத்துவர்களுக்கு உதவியாக இருப்பவர்.


44.நோயூக்கி என்றால் என்ன?

நோயை உண்டாக்கும் உயிரி எ-டு பிளாஸ்மோடியம்.


17. உள்ளம்


1.உளவியல் என்றால் என்ன?

மனித நடத்தையை ஆராயும் அறிவியல் துறை.


2.கல்வி உளவியல் என்றால் என்ன?

கற்றல், கற்பித்தல் ஆகிய செயல்கள் திறமையுடன்