105
நடைபெற உளவியல் விதிகளைப் பயன்படுத்தும் நடைமுறை உளவியல்.
3.புல உளவியல் என்றால் என்ன?
தொடர்பற்ற பல புலங்களின் தொகுப்பு உள்ளம் என்பது பண்டைய உளவியல் கொள்கை. இது தற்கால உளவியல் கொள்கையினால் மறுக்கப்படுகிறது.
4.முழுதுமறி உளவியல் கொள்கை என்றால் என்ன?
உளச் செயல்களின் உண்மை இயல்புகளை அறிய, அவற்றை முழுமையாக அறிய வேண்டும். மாறாகப் பகுத்துத் துண்டுதுண்டாக ஆராயக்கூடாது என்னும் கொள்கை. இது ஒரு புலமே ஆகும்.
5. சமூக உளவியல் என்றால் என்ன?
சமூகக் குழுக்கள் தோன்றிச் செயல்பட இன்றியமையாத காரணங்கள், சமுதாயத் தொடர்பினாலும் செல்வாக்கினாலும் தன் மனித வளர்ச்சி, நடத்தைத் தாக்குதல் ஆகியவை பற்றி ஆராயும் உளவியற் பிரிவு.
6.உள்ளம் என்றால் என்ன?
உள்ளம் ஒர் உறுப்பு அன்று. மூளையின் செயலே. இதனால் நாம் சுற்றுப்புறத்தைப் பற்றி அறிகிறோம். உணர்ச்சிகள், எழுச்சிகள், விருப்பங்கள் எல்லாம் ஏற்படுகின்றன. பொருள்களைப் பகுத்தறிந்து முடிவு எடுக்க முடிகிறது. மூளை இல்லையேல் உள்ளமும் இல்லை.
7.நனவுள்ளம் என்றால் என்ன?
உள நிகழ்ச்சிகள் நம் நினைவோடு நடைபெறும் நனவு நிலை உள்ளம்.
8.உள் நனவுள்ளம் என்றால் என்ன?
நனவுள்ளத்திற்கு அடுத்தது. இதிலுள்ள எண்ணங்கள் வேண்டியபொழுது தடையில்லாமல் நனவுள்ளத்திற்கு வரும். எ-டு வாய்பாடு கூறுதல், பல நிகழ்ச்சிகளை நினைவுப்படுத்திக் கூறுதல்.
9.அடியுள்ளம் என்றால் என்ன?
இது நனவிலி உள்ளம். உள்ளத்தின் பெரும் பகுதி,